கர்தார்பூர் வழித்தடம்; இம்ரான் கானின் அறிவிப்பை மறுத்த அந் நாட்டு இராணுவம்!

Published By: Vishnu

07 Nov, 2019 | 04:26 PM
image

பாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடம் நாளை மறுதினம் திறக்கப்படும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்ட தேவையில்லை என அந் நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் அதனை ஏற்க மறுத்த பாகிஸதான் இராணுவம், இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டும் திடீர் அறிவிப்பு செய்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.

இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை மறுதினம் திறந்து வைக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களுக்கு முதல் நாள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது, கடவுச்சீட்டு தேவையில்லை, 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்தால் போதும் என இம்ரான் கான் அறிவித்தார்.

எனினும் அதனை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துள்ளது. இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் இராணுவ திடீர் அறிவிப்பு செய்துள்ளது. 

இதையடுத்து கடவுச்சீட்டு தேவையா என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

2024-04-20 11:42:55
news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08