கோத்தாபய இலங்கை பிரஜை என்ற தீர்ப்பை நீதிமன்றமே வழங்கியது : எதிர் கட்சி

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 04:01 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ  முழுமையான இலங்கை பிரஜையும் இல்லை, முழுமையான அமெரிக்க பிரஜையும் இல்லை. அவ்வாறான ஒருவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது என ஆளும் தரப்பு சபையில் கூற  கோததாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை என்ற தீர்ப்பை நீதிமன்றமே வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சி கூறியது.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் டி.பி ஹேரத், கோத்தாபய ராஜபக்ஷவே தேசிய தலைவர். மூவின மக்களையும் இணைத்து நாட்டினை ஐக்கியப்படுத்த முன்வந்துள்ள ஒரே வேட்பாளர் அவர்தான். இந்த நாட்டில் மோசமான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் தேசிய ஒற்றுமையையும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் உருவாக்கினார். 

ஆனால் இன்று எதிரணியில் உள்ளவர்கள் நாட்டினை பிரிக்கும் நடவடிக்கையை எடுக்கின்றனர். அதுமட்டும் அல்லாது கோத்தாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை மீதான கேள்வியை எழுப்பி அவரை ஓரங்கட்ட முயற்சி எடுக்கின்றனர் என்றார். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஆளும் தரப்பு உறுப்பினர் அமைச்சர் அஜித் பி.பெரேரா :- கோத்தாபய ராஜபக்ஷ முழுமையாக இலங்கை பிரஜை அல்ல, அதேபோல் முழுமையான அமெரிக்க பிரஜையும் அல்ல. இலங்கையில் முறையாக பிரஜாவுரிமையை பெறவும் இல்லை, அதேபோல் அமெரிக்காவின் பிரஜாவுரிமையை முறையாக பெறவும் இல்லை. அவ்வாறான ஒருவரை எவ்வாறு மக்கள் அங்கீகரிக்க முடியும். உங்களின் வேட்பாளர் அங்கீகாரம் இல்லாதவர் என்றார். 

இதற்கு பதில் தெரிவித்த ஹேரம் எம்.பி:- உங்களின் கேள்விக்கு நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றம் அவரை அங்கீகரித்துவிட்டது என்றார். 

மீண்டும் கேள்வி எழுப்பிய அமைச்சர்  அஜித் பி.பெரேரா :- நீதிமன்றம் அவ்வாறு கூறவில்லை. 

சட்டரீதியற்ற பிரஜாவுரிமை குறித்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்றே நீதிமன்றம் கூறியது. விடயம் விளங்காது இவர்கள் பேசுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44