தோட்டத் தொழி­லா­ள­ருக்கு சம்­ப­ளத்­துடன் கூடிய விடு­முறை வழங்க ஆவன செய்க: தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு கடிதம்

Published By: J.G.Stephan

07 Nov, 2019 | 12:44 PM
image

ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வி­ருக்கும் 16ஆம் திக­தி­யன்று தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு முழுநாட் சம்­ப­ளத்­துடன் கூடிய விடு­முறை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்­பி­னரும் ஹாலி எல தொகுதி ஐ.தே.க அமைப்­பா­ள­ரு­மான ஜயந்த கன்­னங்­கர கடிதம் மூலம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

வாக்­கெ­டுப்பு நிலையம் அமைந்­துள்ள தூரத்­திற்கு ஏற்ப அரை நாள் அல்­லது அதற்கு கூடு­த­லான நேரமோ தமது நிறு­வ­னத்தில் வேலை செய்யும் தொழி­லா­ளர்­க­ளுக்கு விடு­முறை வழங்க வேண்­டு­மென தேர்தல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

எனினும் கடந்த உள்­ளூ­ராட்சிமன்ற தேர்­தல்­களின் போது ஊவா மாகா­ணத்தில் வாக்­க­ளிப்பில் ஈடு­பட்­டு­விட்டு தொழி­லுக்கு சென்ற தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அரை­நா­ளுக்­கு­ரிய சம்­ப­ளத்தை சில கம்­ப­னிகள் வழங்­கி­யி­ருந்­தன. இதனால் அவர்­க­ளது தொழில் உரிமை மற்றும் வரு­மானம் என்­பன  பாதிக்­கப்­பட்­டன.

எனவே எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெறும் தேர்­தல்­களின் வாக்­க­ளிப்பின்போது தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52