ஈராக்கிய பலுஜ்ஜாஹ் நகரில் இடம்பெற்ற மோதல்களின் போது ஐ.எஸ். தீவிரவாத குழுவிலிருந்து தப்பியோட முயற்சித்த தீவிரவாத குழுவைச் சேர்ந்த 5 உறுப்பினர்களுக்கு தீவிரவாதிகளால் பொது இடத்தில் வைத்து நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பலுஜ்ஜாஹ் நகர்கடந்த இரு வருடங்களாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த நகரை மீளக் கைப்பற்றும் முகமாக அந்நகருக்கு அருகில் ஷியா இன படையினரால் முக்கிய தாக்குதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஐ.எஸ். தீவிரவாத குழுவின் உறுப்பினர்களான குறிப்பிட்ட 5 பேரும் தீவிரவாத குழுவிலிருந்து வெளியேறி அந்த நகரை விட்டு தப்பியோட முயற்சித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் ஐவரையும் கைது செய்த தீவிரவாதிகள் அவர்களை தமது மத நீதிமன்றத்தில் நிறுத்திய போது அவர்களது நாக்கைத் துண்டிக்க தீர்ப்பளிக்கப்பட்டது.

மேற்படி பலுஜ்ஜாஹ் நகரை விட்டு வெளியேற முடியாது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு தொடர்ந்து சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.