ஐ.தே.க.வின் தேர்தல் கோட்­டை­யான கொழும்பை மொட்டு உடைத்­தெ­றியும் - பசில் சவால்

07 Nov, 2019 | 12:30 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

கொழும்பு மாவட்டம் ஐக்­கி­ய­தே­சிய கட்­சிக்கு உரித்­து­டை­யது என்ற பாரம்­ப­ரியம்  இம்­முறை  மாற்­றி­ய­மைக்­கப்­படும். தலை­ந­கரின் அனைத்து தேர்தல் தொகு­தி­க­ளையும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கைப்பற்றி பல­மான ஆட்­சி­ய­மைக்கும். ஸ்ரீலங்கா  சுதந்­திர கட்­சி­யினை எவரும் பாது­காக்க  வேண்­டிய தேவை கிடை­யாது. எம்­முடன்  இணைந்­துள்ள கட்­சி­களின் தனித்­து­வத்­திற்கு  எந்­நி­லை­யிலும் பாதிப்பு ஏற்­ப­டாது என பொது ஜன பெர­மு­னவின் ஸ்தாபகர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ் வில்  கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர்  சஜித் பிரே­ம­தாஸ  கொழும்­பு வாழ் மற்றும் மக்­களின் குடி­யி­ருப்பு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்­க­வில்லை. ஜனா­தி­ப­தி­யாக கோத்­தபாய ராஜ­ பக் ஷ தெரிவு செய்­யப்­பட்­ட­வுடன்   வீடற்­ற­வர்­க­ளுக்கு  தர­மான  வீடுகள் பெற்றுக் கொடுக்­கப்­படும்    

நல்­லாட்சி அர­சாங்­கத்தில்  வாழ்க்கை செல­வுகள் அதி­க­ரிக்­கப்­பட்­ட­மை­யினால்  குடும்ப பெண்­களே பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.  நுண்­கடன்  வச­தி­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் பாரிய நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள். கொழும்பில் மாத் ­திரம் 1500ற்கும் அதி­க­மான சிறு­குடில்  பகு­தி கள் காணப்­ப­டு­கின்­றன. இப்­பி­ர­தே­சங்­க ளில் அடிப்­படை வச­திகள் ஏதும் கிடை­யாது.

வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை  அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ  குடி­யி­ருப்பு பிரச்­சி­னை­களை பிரசா­ர­மாக்­கி­னாரே   தவிர தீர்வு காண­வில்லை. பொது­ஜன பெர­மு­னவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில்  தர­மான   வீடுகள்  அனை­வ­ருக்கும்  பெற்றுக் கொடுக்­கப்­படும். கடன்­சு­மையில் சிக்­குண்­டுள்ள  பெண்கள் அனை­வரும் கடன் சுமை­களில் இருந்து விடு­விக்­க­ப்ப­டு­வார்கள்.     பெண்கள்  மத்­திய கிழக்­கா­சிய  நாடு­க­ளுக்கு செல்­லாமல் சுய தொழில் ஊடாக முன்­னேற்­ற­ம­டையும் திட்­டங்­களை செயற்­ப­டுத்­து வோம்.

பொது­ஜன பெர­முன  தனித்து  ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை.  அனைத்து கட்­சி­களின் ஆதர­வு­டனே போட்­டி­யி­டு­கின் றோம். எம்­முடன் இணைந்துக் கொண்­டுள்­ள­வர்கள்  அனை­வ­ரையும்   பொது­வா­கவே மதிப்­பி­டுவோம்.    சுதந்­திர கட்­சியை  பல­வீ­னப்­ப­டுத்தும் நோக்கம் எமக்கு கிடை­யாது.    சுதந்­திர கட்­சியை  நாங்கள் பாது­காப்போம்.

2015 ஆம் ஆண்டு அர­சியல் ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட தவ­றான தீர்­மா­னங்­க­ளி­னா­லேயே பொது­ஜன பெர­மு­னவை தோற்­று­வித்து இன்று அர­சி­யலில் பல­மாக உள்ளோம். இது  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு எதி­ரான  செயற்­பாடு  அல்ல.  

ஐக்­கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்­டத்­திற்கு உரி­யது என்று குறிப்­பி­டப்­படு­கின்றது. இது வரலாற்று ரீதியி லான உண்மை ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்டத்தின் அனைத்து தேர் தல் தொகுதிகளையும் கைப்பற்றி தலை நகரினையும் கைப்பற்றும் என்பதை உறுதியுடன் குறிப்பிட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43