கொழும்பில் இடம்பெற்ற கொலை : சந்தேகநபர் ஒருவர் கைது

Published By: Digital Desk 3

07 Nov, 2019 | 12:26 PM
image

கொழும்பு - 2 பகுதியில் ஆண் ஒருவர் இனந்தெரியாதோரால் கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 02,  ஸ்லேவைலன் சந்தி தர்மபால வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்  நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபருடன் இடம்பெற்ற சண்டையின்போது ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை மேற்கொள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 49 வயதுடையவரெனவும் அவர் முன்னர் பொலிஸ் றக்பி அணிக்காக விளையாடியுள்ளதாகவும் அப்போது அவர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, குறித்த நபர் பின்னர் கொழும்பில் உள்ள பாடசாலையொன்றின் றக்பி அணி பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45