ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் இரு இலங்கையர் உட்பட நால்வர் இந்தியாவில் கைது

Published By: Priyatharshan

26 May, 2016 | 01:23 PM
image

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல  பணம் பெற்றுக்கொண்டதாகக்  கூறப்படும்  இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நான்கு பேரை இந்தியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் நால்வரையும் தமிழ்நாடு கோயம்புத்தூர்  பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த  எடிசன் எலியஸ் ராஜா ( 48), இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த விமலன்  (31),  தமிழ்நாடு வலசரவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் பெட்ரிக் (27) நேசப்பாக்கம் சென்னையைச் சேர்ந்த விஜிதா (34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கும்புடிப்பூண்டி, கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த அறுவரிடம்  தலா 70,000 ரூபா வீதம் 370, 000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பணத்தை பறிகொடுத்த கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த முத்துராஜ்  என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த  முத்துராஜ் உட்பட வின்சன் ராஜ் , சிவராஜன், ராமஜெயம்,சதீஸ், ஜெயந்தன்  ஆகியோரே இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு தற்போது சென்னை புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கோயம்புத்தூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22