பதுளை, பசறை பகுதியில் காதல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று மாணவிகளை எச்சரித்த ஆசிரியர்கள் மீது   மாணவிகளின் காதலர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிகள் இருவர், இரு இளைஞர்களை காதலித்து வந்தமை, ஆசிரியர்களுக்கு தெரியவரவே ஆசிரியர்கள் அம் மாணவிகளை கண்டித்துள்ளனர்.

இதனை அம் மானவிகள் தமது காதலர்களிடம் புகார் செய்யவே, மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்றமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.