சு.க.வை காப்­பாற்­றவே சஜித்திற்கு ஆத­ரவு ; கோத்­தா­வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு என்னால் கூறமுடியாதென்கிறார் உமா

Published By: Daya

07 Nov, 2019 | 12:17 PM
image

(நா.தனுஜா)

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கொழும்பு மாவட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளரும், மாந­க­ர­சபை உறுப்­பி­ன­ரு­மான உமா சந்­திரா பிரகாஷ் மற்றும் தமிழ் தேசிய முற்­போக்குக் கட்­சி­யினர் தமது ஆத­ரவை வெளி­யிட்­டுள்­ளனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று புதன்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே, சஜித் பிரே­ம­தா­ச­வுக்­கான தமது ஆத­ரவு தொடர்பில் இவர்கள் குறிப்­பிட்­டனர்.

அங்கு கருத்து வெளி­யிட்ட உமா சந்­திரா பிரகாஷ் கூறி­ய­தா­வது,

மஹிந்த ராஜ­பக்ஷ ஆரம்­பத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து ஒதுங்கி, புதி­தாகக் கட்­சி­யொன்றை ஆரம்­பித்தபோது அவ­ரு­டைய தலை­யீடு கட்­சியில் இருக்­காது என்றே கரு­தினோம். அந்­த­வ­கையில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தாலும் கூட, சுதந்­திரக் கட்­சியின் சார்பில் வேட்­பா­ள­ரொ­ருவர் கள­மி­றக்­கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தோம். அதற்­கேற்ப எமது கட்­சியை விற்­க­மாட்டோம் என்றும், கட்சி அழிந்து போவ­தற்கும் இட­ம­ளிக்க மாட்டோம் என்றும் பொதுச்­செ­ய­லாளர் உள்­ளிட்ட தரப்­பினர் கூறி­வந்­தனர்.

சுதந்­திரக் கட்­சியும், பொது­ஜன பெர­மு­னவும் கூட்­டணி அமைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­வந்த நிலையில் உயிர்த்த ஞாயி­று­தின தாக்­கு­தல்­களை அடுத்து எமது கட்­சி­யுடன் எவ்­வித கலந்­து­ரை­யா­டல்­களும் இன்றி 'நானே ஜனா­தி­பதி வேட்­பாளர்' என்று கோத்­தாபய ராஜ­பக்ஷ அறி­வித்தார்.

 

அதே­வேளை கோத்­தாபய ராஜ­பக்ஷ­வுக்கு ஆத­ர­வ­ளிப்­பதா, இல்­லையா என்ற தீர்­மா­னத்தை எடுக்க வேண்­டிய கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பதில் தலை­வ­ரிடம் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்டு நடு­நிலை வகிக்கப் போவ­தாக ஒதுங்­கிக்­கொள்­கிறார். அதன்­பின்னர் பலரின் விருப்பம் தெரி­விக்­காத போதிலும், கோத்­தாபய ராஜ­பக்ஷவை ஆத­ரிப்­பது என்ற தீர்­மா­னத்தை சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் உள்­ளிட்ட சில தரப்­பினர் மேற்­கொள்­கின்­றார்கள்.

இந்­நி­லையில் சுதந்­திரக் கட்சி அழிந்­து­போ­காமல் பாது­காப்­ப­தற்­கான ஒரே­வழி சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பது மாத்­தி­ர­மே­யாகும். அது­மாத்­தி­ர­மன்றி நான் தமிழ் மக்­களின் பிர­தி­நிதி என்ற வகையில், போரின் போதும் அதன் பின்­னரும் கோத்­தாபய ராஜ­பக்ஷ உள்­ளிட்­டோரால் தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்பில் நன்கு அறிந்­தி­ருக்­கிறேன். அவ்­வா­றி­ருக்­கையில் 'கோத்­த­பாய ராஜபக்ஷ­வுக்கு வாக்­க­ளி­யுங்கள்' என்று தமிழ் மக்­க­ளிடம் என்னால் பொய் கூற­மு­டி­யாது. ஆகவே சுதந்­திரக் கட்­சியில் இருந்­து­கொண்டே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்­கிறேன் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ் தேசிய முற்­போக்குக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ஆறுமுகம் ஜோன்சன் கூறியதாவது,

வடக்கு மாகாண தமிழ் மக்களின் சார்பில் சிந்தித்து புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறோம். 2015ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஜனநாயகத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது அவசியம் என்று கருதியே இத்தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04