நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சுகாதார சேவைப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். 

மேலும், இதன் முதற்கட்டமாக நாளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலையின் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயளாலர் வைத்தியர் நாலின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத அனைத்து மாவட்டங்களிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படாது என மேலும்,  அறிவிக்கப்பட்டுள்ளது.