ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மிலேனியம் சவால் ஒப்பந்தம் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக அமெரிக்க அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

06 Nov, 2019 | 07:45 PM
image

(எம்.மனோசித்ரா)

மிலேனியம் சவால் (எம்.சி.சி) ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளமையை அமெரிக்கா வரவேற்கிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்த்தில் கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரம் தொடர்பில் நவம்பர்  16 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்திருக்கிறது.

 

எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் இன்று அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடாக அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

மிலேனியம் சவால் ஒப்பந்த்தின்  480 மில்லியன் அமெரிக்க டொலர் (கடனற்ற) அபிவிருத்தி நிதியுதவிக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்கிறது. அரசாங்கத்தினதும் தனியார் துறையினதும்  அடையாளங்ளை காணப்பட்ட தேவைகளுக்கான நிதியளிப்பின் ஊடாக குறைந்தது 11 மில்லியன் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உதவியை இலங்கையே கோரியிருந்தது.

இந்த நிதியுதவியினால் ஆதாரமளிக்கப்படும் திட்டங்களானது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்பதுடன், கொழும்பில் பொது போக்குவரத்தையும் மேம்படுத்தும். அத்துடன், மாகாண வீதிகளை மேம்படுத்த செயற்படும் என்பதுடன், காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையர்களின் காணி உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் தற்போதிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை விரிவாக்கமும் செய்யும். 

இலங்கை அரசாங்கம் இந்த நிதியுதவி ஒப்பந்தத்தின் வரைவொன்றை நிதியமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதுடன், அது தற்போது இலங்கை மக்களின் மீளாய்வுக்கு அங்கு கிடைக்கக்கூடியதாக உள்ளது. 

இந்த அபிவிருத்தி நிதியுதவியின் கீழ் அமெரிக்கா எந்தவொரு காணிக்கும் உரித்துடையதாகவோ அல்லது குத்தகையை கொண்டதாகவோ இருக்காது. இந்த ஐந்து வருட நிதியுதவி ஒப்பந்தத்தின் அமுலாக்கம் முழுவதும் நிதியுதவியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இலங்கையே மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்யும்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நிதியுதவி கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரம் தொடர்பில் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11