மிலேனியம் சவால் ஒப்பந்தத்துக்கு எதிராக அமெரிக்க தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம்..!

Published By: J.G.Stephan

06 Nov, 2019 | 04:35 PM
image

(எம்.மனோசித்ரா)

மிலேனியம் சவால் (எம்.சி.சி) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு எதிரான அமைப்பினால் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையான இன்று முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் எம்.சி.சி ஒப்பந்தமானது இலங்கையில் சுயாதீனத் தன்மைக்கும், மக்களின் இறையான்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்றும் எனவே அவற்றில் கையெழுத்திட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு எதிரான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி மயூர குணவங்ச வழங்கிய ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

இலங்கைக்குள் அமெரிக்க இராணுவ முகாம்களை ஸ்தாபிக்கும் நோக்கத்தில் அமைந்துள்ள இந்த ஒப்பந்தத்திற்கு பொது மக்களும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்ப்பு தெரிவித்திருக்கின்ற போதிலும் அரசாங்கம் அதில் கையெழுத்திட முயற்சிப்பது தேசத்துரோகமாகும்.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கையில் இராணுவ முகாம்களை ஸ்தாபிப்பதற்கான இடங்களை ஒதுக்குதல், விரும்பிய வகையில் இராணுவத்தினர் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதியளித்தல், அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சிவில் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளால் இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியிலிருந்து அவர்களை விடுவித்தல் உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான பல்வேறு அம்சங்கள் இந்த உடன்படிக்கையில் காணப்படுகின்றன. 

எம்.சி.சி ஒப்பந்தம் மாத்திரமின்றி சோபா மற்றும் எக்சா ஆகிய ஒப்பந்தங்களும் நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாகவே அமைகின்றன. எனவே தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலிற்கு பின்னரோ  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவை கையெழுத்திடப்படக் கூடாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதும் இல்லையெனவும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16