நாட்டில் வெள்ளை வேன், சோதனைச்சாவடிகள் , ஊரடங்குச் சட்டம் வேண்டுமா? அபிவிருத்தி ஜனநாயகம் வேண்டுமா? - விஜயகலா மகேஸ்வரன் 

Published By: Digital Desk 4

06 Nov, 2019 | 03:31 PM
image

நாட்டில் வெள்ளை வேன், சோதனைச்சாவடிகள் , ஊரடங்குச் சட்டம் வேண்டுமா? அபிவிருத்தி ஜனநாயகம் வேண்டுமா-? என மக்கள் சிந்திக்கவேண்டும் ஜனநாயக ஆட்சி வேண்டுமானால் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதிவேட்பாளர் சஜித் பிரேமதாஸவை தமிழ் மக்கள் வெற்றிபெற வைக்கவேண்டும் என கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கான மகளிர் மாநாடு தொல்புரம் முத்துமாரி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழ் மக்களின் பூரண ஆதரவுடன் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கும் தற்போதை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வெற்றியடைவதற்கும் பெரும் பங்காற்றியவர்கள் வடக்கு கிழக்கு மக்களே தமிழ் மக்களினால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி அந்த நன்றிக்கடனுக்கு செய்யவேண்டிய அபிவிருத்திகளை வேலைவாய்ப்புக்களை வழங்காது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கினார். சட்டத்திற்கு முரணாக மேற்கொண்ட மைதிரியின் செயற்பாட்டினால் நாடு சிறிது காலம் ஸ்தம்பிதம் அடைந்தது. 

அதன் பின்னர் மீண்டும் தொடர்ந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் துரித செயற்பாட்டினால் குறுகிய காலத்தில் வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

வடக்கில் ஏராளமான முன்பள்ளி ஆசிரியர்கள் மாதாந்த சம்பளமாக 2 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் வரையிலேயே பெற்று வருகின்றனர். தற்போதைய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாஸவும் இவ்வாறான முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தேர்தல் அறிக்கையிலும் இதனைத் தெரிவித்துள்ளனர். 

எனவே தமிழ் மக்கள் ஜனநாயகத்துடன் அபிவிருத்திகளையும் பெற்று நிம்மதியாக வாழவேண்டுமானால் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு அளித்து அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் மக்களை எவ்வாறு நசுக்கினார் என அனைவருக்கும் தெரியும் உள் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக கூறி வடக்கு கிழக்கிலுள்ள ஏராளமான பெண்களின் கணவன் மார்களை இழக்கச் செய்து பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக மாற்றியுள்ளார். 

அதேபோன்று எத்தனையே சிறுவர்கள் பெற்றோர்களை இழந்து அநாதைகளாகக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரங்கள் முடக்கப்பட்டிருந்தன. இவர்களது ஆட்சிக் காலத்திலேயே வெள்ளை வான் கடத்தல்கள் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. ஆட்சி மாறி நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் கருத்துச் சுதந்திரங்களும் வழங்கப்பட்டு அபிவிருத்திகளும் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை தொடரவேண்டுமானால் சஜித்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் தமிழ் மக்கள் மீண்டும் வெள்ளை வேன் கடத்தல்கள் ஊரடங்குச் சட்டம் சோதனைச்சாவடிகள் போன்ற அழிவு யுகத்திற்கு செல்லவேண்டுமா? ஜனநாயகத்துடன் நிம்மதியாக வாழவேண்டுமா? என மக்கள் சிந்திக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27