சக பணியாளரைக் கொன்றவருக்கு விஷ ஊசியேற்றி மரணதண்டனை

06 Nov, 2019 | 02:22 PM
image

அமெ­ரிக்க தென் டகோட்டா பிராந்­தி­யத்தில் கொள்ளைச் சம்­பவம் ஒன்றின் போது முன்னாள் சக பணி­யா­ளரை கத்­தியால் குத்திக் கொன்ற குற்­றச்­சாட்டில் நப­ரொ­ரு­வ­ருக்கு  விஷ ஊசி­யேற்றி நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இரவு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

சார்ள்ஸ் றினெஸ் (63 வயது) என்ற மேற்­படி நபர்  தான் தன்­னி­னச்­சேர்க்­கை­யாளர் என்­பதால் தனக்கு இந்தத் தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்­றத்தில் மேன்­ மு­றை­யீடு செய்­தி­ருந்தார். இந்­நிலையில் இந்த வழக்கை விசா­ரித்த உச்ச நீதிமன் றம் அவ­ரது மர­ண­தண்­ட­னையை  தடுத்து நிறுத்­து­வ­தற்கு மறுத்­த­தை­ய­டுத்து அவ ­ருக்கு தென் டகோட்­டா­வி­லுள்ள சியொ க்ஸ் போல்ஸ் எனும் இடத்­தி­லுள்ள சிறைச்­சா­லையில் நேற்று முன்­தினம் இரவு 7.39 மணிக்கு  பென்­தோ­பார்­பிடல் விஷ இர­சா­யனத்தைக் கொண்ட விஷ ஊசியை ஏற்றி மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.  

அவர்  1992ஆம் ஆண்டில் தன்னைப் பணி­நீக்கம் செய்த டோனட் உண­வு­களை விற்­பனை செய்யும் கடையில் கொள்­ளை­யிடச் சென்ற போது அந்தக் கடை­யி­லி­ருந்த முன்னாள் சக ஊழி­ய­ரான டொன்­னிவன் சேப்­பரை (22 வயது)  கத்­தியால் குத்திக் கொன்­ற­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு முன்னர் சார்ள்ஸ் றினெஸ் தனது  இறுதி உண­வாக  பொரித்த இறைச்சி, யோக்கட், இனிப்பு தின்­பண்­டங்கள், ஐஸ்­கிறீம் உள்­ள­டங்­க­லா­ன­வற்றை உண்­ட­துடன்  பியர் மற்றும் கோப்பி பானத்­தையும் அருந்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதன்­போது  மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றத்தை நேரில் அவ­தா­னிக்க அங்கு ஆஜ­ரா­கி­யி­ருந்த டொன்­னி­வனின் பெற்­றோரை நோக்கி நேர­டி­யாக உரை­யா­டிய சார்ள்ஸ், என் மீது நீங்கள் காண்­பிக்கும் கோபம் மற்றும் வெறுப்பு என்­ப­வற்­றுக்­காக உங்­களை மன்­னிக்க இறை­வனைப் பிரார்த்­திக்­கிறேன்  என்று தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் தனக்­காக வாதிட்ட சட்­டத்­த­ர­ணிகள் உள்டங்கலானவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து தான் அனைவரிட மிருந்தும் விடைபெறுவதாக கூறினார். விஷ ஊசியேற்றி 12 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47