கடவத்தை மகமாயா மகளிர் கல்லூரியின் புதிய கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்தார் ஜனாதிபதி 

Published By: Daya

05 Nov, 2019 | 04:35 PM
image

கம்பஹா மாவட்டத்தில் புகழ்பெற்ற ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (05) முற்பகல் இடம்பெற்றது. 

சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கராவின் இலவசக் கல்விக் கொள்கைக்கேற்ப உருவாக் கப்பட்ட 11ஆவது மத்திய கல்லூரியான ஹேனேகம மத்திய கல்லூரி 1944ஆம் ஆண்டு 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நாட்டுக்கு பல்வேறு சிறந்த பிரஜைகளை வழங்கி ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு வழிவகுத்த புகழ்பெற்ற பாடசாலையாக இப் பாடசாலை விளங்குகிறது. 

இன்று முற்பகல் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் 

ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதைக் குறிக்கும்  நினைவுப் பலகையை ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்தார் 

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிபர் விஜய சத்தியஜித் குலரத்ன மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கள், பழைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இதேநேரம் மகர, கடவத்தை மகமாயா மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்குடன் கூடிய புதிய கட்டடத்தை ஜனாதிபதி இன்று  மாணவிகளிடம் கையளித்தார்.

இன்று முற்பகல் கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதி மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

கல்வியிலும் விளையாட்டிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கடவத்த மகமாயா கல்லூரியில் நீண்டகாலமாக இருந்துவந்த குறையை நிவர்த்திக்கும் வகையில் இந்த உள்ளக விளையாட்டரங்குடன் கூடிய இரண்டுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதியினால் அடிக்கல் நடப்பட்டது. 

அப்போது ஜனாதிபதி மாணவிகளுக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப 06 மாத காலப் பகுதியில் இந்த கட்டட நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

மிக விரைவாக விளையாட்டரங்குடன் கூடிய புதிய கட்டடத்தை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்காக குறித்து மாணவிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர். 

ஜிம்னாஸ்டிக் அணியினர் உள்ளிட்ட கல்லூரியின் மாணவிகளினால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். 

கல்லூரியின் அதிபர் புஷ்பிக்கா பந்துவங்ச ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51