கடந்தகால வரலாறுகளை பாடமாகக்கொண்டு மட்டக்களப்பு மக்கள் வாக்களிக்க வேண்டும் - துரைரெட்ணம்

05 Nov, 2019 | 04:09 PM
image

எதிர்வருகின்ற தேர்தலில்  மட்டக்களப்பு மக்கள் வன்முறையாளர்களுக்கும் குடும்ப ஆட்சியாளர்களுக்கும் எதிராக வாக்களிக்க  துணிந்து உள்ளனர் கடந்த கால வரலாறுகளை பாடமாகக் கொண்டு தபால் மூல வாக்குகளை  அளித்துள்ளனர் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா .துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள்  தங்களது உரிமை, அபிவிருத்தி தொடர்பாகவும் நாளாந்த பிரச்சினை தொடர்பாகவும்  சிந்துது வாக்களிக்க தீர்மானித்திருக்கிறார்கள்.

தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள்  ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் மூலம் தங்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கடந்த வாரங்களில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில்  குறிப்பாக மட்டக்களப்பில் வன்முறையாளர்களுக்கு எதிராக70 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

எதிர்வருகின்ற தேர்தல்களிலும் மட்டக்களப்பு மக்கள் வன்முறையாளர்களுக்கும்   குடும்ப ஆட்சியாளருக்கும் எதிராக வாக்களித்து ஜனநாயக  சூழலை மாவட்டத்தில் உருவாக்குவதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலை எட்டாவது தேர்தலாக மக்கள் கருத வேண்டும் மூன்று தசாப்தகாலமாக எமது தமிழினம் உரிமைக்காகப் போராடி உயிர்களை அர்பணித்து தியாகம் செய்து அதன் உச்சகட்டமாக துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டு  அதன்பின்  இந்த ஜனாதிபதித் தேர்தல் வந்திருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இந்த  தேர்தலில் மிகவும் உன்னிப்பாக மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

கிழக்கைப் பொறுத்தவரையில் ஒரு ஜனநாயக சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இனவாத கட்சிகள் இரண்டு பக்கமும் சரிக்குச் சமனாக போட்டிபோட்டுக்கொண்டு தேர்தலில் குதித்துள்ளன.

 வடக்கு கிழக்கில் போட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த போட்டித் தன்மையின்  ஊடாக மக்கள்தான் நன்மை அடையப் போகின்றார்கள் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

 போட்டிகள் எம்மிடம் இருந்தே  ஆகவேண்டும் கடந்த காலத்தில் போட்டிகள் இல்லாமல் மூடிய சூழ்நிலையில் வாக்களித்த நிலைமைகள் இருந்ததை  நாம் மறந்துவிடக்கூடாது இன்று  திறந்த வெளியில் வாக்களிக்கும்  சூழல் உருவாகியுள்ளது.

 5 தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த போதிலும் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். 

 கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா அல்லது  இன்றைய சூழலை ஒரு முன்னேற்றகரமாக உருவாக்குவதற்கும் அவர்களின் இனப்பிரச்சினை விடயங்களைப் பேசி  செய்யக்கூடிய நிலைப்பாட்டுக்கு வருகின்ற ஒருவருக்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா?  

எங்களைப் பொறுத்தவரையில்  தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக எமது தலைமை பீடங்கள் ஓரிரு தினங்களில் அறிவிக்கும் அதேபோன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஜனநாயகத்தை முன்னேற்றும் வகையில் உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் .

 குறிப்பாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையிலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலும் இணக்கப்பாடான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்  வடக்கில் ஒரு சூழலும் கிழக்கில் ஒரு சூழலுமாக இருக்கின்றது.

கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும் தேசியக் கட்சிகள் இனரீதியாக இனப்பாகுபாடுகளை உருவாக்க முனைகின்றது .

மட்டக்களப்பு தமிழ் மக்களிடம் சென்று முஸ்லிம்களுக்கு எதிராகவும்  முஸ்லிம் மக்களிடம் சென்று தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள மக்களிடம் சென்று முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகவும்  பேசக்கூடிய நிலைப்பாடு உருவாகியிருக்கின்றது.

இணக்கப்பாடுடனான செயல்முறைகளில் தமிழ் தலைமைகள் இறங்கவேண்டும் இந்த மாவட்டத்தில் சில அமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பணத்துக்காகவும் சொந்த வியாபாரத்திற்காகவும்  சுயநலனுக்காகவும்  வாக்களிக்கவேண்டும் என்று கூறுவதை தமிழ் மக்கள் நிராகரித்து இருக்கின்றார்கள்.

ஆதாரமாக மட்டக்களப்பில் தபால் மூல வாக்கெடுப்பை கூறலாம்.  குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் வன்முறைக்கு எதிராகவும்  எதிர்வரும் காலத்தில் ஜனநாயக ரீதியான வாக்குகளை அளித்து ஜனநாயகத்தை மீற்பதற்கான ஒரு அறிகுறியை மட்டக்களப்பு மக்கள் காண்பித்துள்ளனர் என்று தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44