புத்தளத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் ;4 பேர் படுகாயம்

Published By: Digital Desk 4

05 Nov, 2019 | 11:28 AM
image

ஆனமடுவ நகரில் நேற்று திங்கட்கிழமை (04) மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் கருவலகஸ்வெவ பகுதியை நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு இலக்கான 4 பேர் தப்போவ மற்றும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் ஆணமடுவ பிரதேசத்தில் நே;றறு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர் கருவலகஸ்வெவ பகுதியை நோக்கி பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த பஸ் வண்டியை மறித்த பெண்கள் உட்பட 20 இற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழு இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலால் பஸ் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் 100 க்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால், அங்கு சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்த இடத்திற்கு வருகை தந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியங்கர ஜயரத்ன மற்றும் சனத் நிசாந்த உள்ளிட்டோர் தலையிட்டு மக்களை சமரசப்படுத்தினர்.

அதன் பின்னர் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடும் கருவலகஸ்வெவ பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே தாக்கியதாக பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58