அரசின் நிவாரணப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.!

Published By: Robert

26 May, 2016 | 09:04 AM
image

மர­ணித்­த­வர்­க­ளுக்கு உயிர் கொடுக்க முடி­யாது. ஆனால் அவர்­க­ளது குடும்­பங்­களை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக் ஷ நேற்று சபையில் தெரி­வித்தார்.

அழிந்­து­வரும் வனங்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் அவர் சபையில் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற நாட்டில் ஏற்­பட்ட அனர்த்தம் தொடர்­பி­லான விசேட சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­ற­கை­யி­லேயே மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

1958 இல் நாட்டில் பாரிய வெள்ளம் ஏற்­பட்­டது. அதன் பின்னர் 1997 இல் புயல் வந்­தது 2004இல் சுனாமி வந்­தது. இவ் அனைத்து அனர்த்­தங்­க­ளுக்கும் நாங்கள் முகம் கொடுத்தோம். மக்­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­பினோம்.

அதற்­கான அனு­பவம், திறமை எமது படை­யி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் அரச அதி­கா­ரி­க­ளுக்கும் உள்­ளது.

எனவே இன்­றைய அனர்த்த வேளையில் ஒரு­வரை குற்­றம்­சாட்டிக் கொண்­டி­ருக்­காது அர­சியல் பேதங்­களை மறந்து அனை­வரும் இணைந்து செயல்­பட வேண்டும். நாம் இதனை அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்தக் கூடாது.

அர­சாங்கம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் அதே­வேளை குறை­பா­டு­களும் உள்­ளன. இயற்கை அனர்த்தம் தொடர்பில் நேர காலத்­தோடு அறி­விப்பு விடுத்­தி­ருந்தால் பாரிய பாதிப்­புக்­களை தவிர்த்­தி­ருக்க முடியும்.

அதே­வேளை அரச அதி­கா­ரிகள், உத்­தி­யோ­கத்­தர்கள் ஊழி­யர்கள் தமது கட­மை­களை செய்ய அச்­சப்­ப­டு­கின்­றனர். எனவே அவர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கி தடை­யின்றி மக்கள் சேவை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

மலை­நாட்டில் அழிந்­து­வரும் வன வளத்தை பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவால் மர­ணித்­த­வர்­க­ளுக்கு மீள உயிர் கொடுக்க முடி­யாது.

ஆனால் மர­ணித்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு உத­வி­களை வழங்கி அக் குடும்­பங்­களை வாழ வைக்க முடியும். இதற்­காக அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும்.

அதே­வேளை, அனர்த்­தத்­தினால் சேத­ம­டைந்த வீடுகள் சட்ட ரீதி­யா­னதா? சட்ட விரோ­த­மா­னதா? தாழ்நிலங்களில் அமைக்கப்பட்டதா? என்பது தொடர்பில் கவனம் செலுத்தாது வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு முன்னெடுக்கும் அனைத்து நிவாரண நடவடிக்கைகளுக்கும் எமது பூரண ஆதரவை வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55