இனவாதம் பேசுபவர்களுக்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும் ;றிசாட் 

Published By: Digital Desk 4

04 Nov, 2019 | 08:50 PM
image

இனவாதம் பேசி ,சிறுபான்மையினரை அடிமைப்படுத்தி நாட்டின் ஒற்றுமை, நின்மதியை குலைக்க நினைக்கும் பேரினவாதிகள் தோல்வியடைந்து விட்டார்கள் என்று தேர்தல் முடிவுகள் சொல்லும். என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியா மதீனா நகரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் இடையில்தான் போட்டி உள்ளது. சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பதற்காக நான் மட்டும் அல்ல பல சிறுபான்மை இன கட்சிகளை சேர்ந்த தலைமைகள் நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்கின்றனர். ரத்தின தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்வில, எஸ்.பி.திஸாநயக்க, மகிந்தானந்த அளுத்கமகே போன்ற இனவாதிகள் கோத்தாபயவை வெல்ல வைப்பதற்காக ஓடித்திரிகிறார்கள்.

இந்நாட்டிலே வாழுகின்ற ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் தன்மானத்தோடும், கௌரவத்தோடும், எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ்வதற்கும், எங்களுடைய மத கடமைகளை எந்தவித தடையும் இன்றி நிறைவேற்றுவதற்கு, உங்கள் அனைவரினதும் வாக்குகளை சஜித்பிரேமதாஷவின் ,அன்னம் சின்னத்திற்கு அளியுங்கள். 

தம்புள்ளையில் தொடங்கி திகனை வரை பள்ளிவாசல்களை உடைத்த வரலாறு உள்ளது. இவற்றை யார் செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனவே நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகம் கோத்தாபயவா? சஜித்தா? என சிந்திக்க வேண்டும். இங்கு சில ஏஜென்டுக்கள் பணத்தை கொண்டுவந்து  எங்கள் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்காக சதி செய்கின்றார்கள். அவர்கள் ஒரு மாதிரியான மாயையை காட்டுகிறார்கள். இதற்கு சிறுபான்மையினரின் வறுமை, இயலாமையை பயன்படுத்துகிறார்கள்.

நாங்கள் இந்த நாட்டிற்கு தீங்கிழைக்கவில்லை, இந்த நாட்டில் பல நூறு வருடங்களாக எமது சமூகம் வாழ்ந்திருக்கிறது. பயங்கரவாத ஆயுத கலாசாரத்திற்கு ஒருபோதும் செல்லாதவர்கள் நாங்கள். 

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்திற்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் எதிர்த்து  எம் மக்களை  நிம்மதியாக அப்பிரதேசங்களில் வாழ முடியாத அச்ச நிலையை உருவாக்கியவர்கள் இன்று முஸ்லீம் கிராமங்களுக்கு வந்து வெட்கம் இல்லாமல் வாக்கு கேட்கிறார்கள். 

கடந்த 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாருடன் நின்றோம் அவர் வெற்றி பெற்றார். மஹிந்த ராஜபக்ஷவுடன் 2005 மற்றும், 2010 இல் நின்றோம் வெற்றிபெற்றார், 2015 இல் மைத்திரிபால ஸ்ரீசேனவுடன் நின்றோம் அவரும் வெற்றி பெற்றார். எனவே இந்த தேர்தலில் சஜித்பிரேமதாஷ வெற்றிபெறுவார். 

இன, மத ,வாதம் பேசி சிறுபான்மையினரை அடிமைப்படுத்தி அவர்கள் சார்ந்த தலைவர்கள் மீது அபாண்டத்தை சுமத்தி, ,நாட்டின் ஒற்றுமை, நின்மதியை குலைக்க நினைக்கும் பேரினவாதிகள் தோல்வியடைந்து விட்டார்கள் என்று தேர்தல் முடிவுகள் சொல்லும் .

பேரின வாத சக்திகள்  ஒருபோதும் வெல்ல முடியாது அதனை அவர்களுக்கு புகட்டுவதற்கு நீங்கள் அனைவரும் பிரார்தியுங்கள், ஒட்டுமொத்த வவுனியா மக்களும் சஜித்துக்கே வாக்களியுங்கள்.என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04