முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களின் காணிப்பிரச்சினைக்கும் சிறந்ததொரு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் ! - சஜித்

Published By: Digital Desk 4

04 Nov, 2019 | 07:19 PM
image

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குகொண்ட பிரசார கூட்டம் இன்றையதினம் (4) முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசற்ற்ஹ்தில் இடம்பெற்றது . இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் கேப்ப்பாபுலவு மக்களின் காணிபிரச்சினைக்கும் தன்னால் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து அங்கு  உரையாற்றிய அவர் ,

முல்லைத்தீவின் ஆறு பிரதேச செயலகங்களிலும் 660 சிறு கிராமங்களை உள்ளடக்கியதாக ஒவ்வொரு குடும்பங்களது ஒவ்வொரு உறுப்பினர்களின் எதிர்கால பொறுப்பையும் சஜித் பிரேமதாச கைக்கு எடுத்துள்ளார் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இப்பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் கைத்தொழிலை சிறந்த முறையில் கொண்டு செல்லும் சிறந்த ஏற்பாட்டை உருவாக்கித் தருவேன். நந்திக்கடல் களப்பு உள்ளிட்ட களப்புப் பகுதிகளை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வேன். இப்பிரதேசத்தில் இருக்கும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவேன். நீர் விநியோக திட்டங்களை விரிவுபடுத்தி தேவையான நீரைப் பெற்றுத் தருவேன்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான, அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையையும் எடுப்போம். பெண்களை மையப்படுத்திய குடும்பங்களுக்கு தேவையான பொருளாதார வசதிகளை கொடுப்போம்.

2010ம் ஆண்டு யுத்தம் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தச் சலுகைகளும் இப்பிரதேசங்களில் வழங்கப்படவில்லை. எமது அரசில் வடக்கு, கிழக்கு வெவ்வேறாக இரு ஜனாதிபதி மையங்களை உருவாக்கி மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நடவடிக்கையை எடுப்பேன்.

பறங்கியாறு - வவுனிக்குளத்தை உள்ளடக்கி பாரிய நீர்த்தேக்கத் திட்டத்தை உருவாக்குவோம். இதன்மூலம் விவசாயத்தை மேலோங்கச் செய்வோம். விவசாயத்துக்கு இலவச உரங்களை கொடுக்கும் அரசாங்கமாக வரலாற்றில் நாம் இருப்போம்.

கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி எனது அரசில் இரு இலவச சீருடையும், ஒரு பாதணியும், பகல் போசனத்தையும் வழங்குவேன். இளைஞர் யுவதிகளுக்காக அனைத்துப் பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி தொழில்நுட்ப கல்லூரியை உருவாக்குவோம். அதன்மூலம் முல்லைத்தீவுக்கு ஆறு தொழில் மையங்கள் கிடைக்கும்.

அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கி கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவேன். வேலையில்லாப் பிரச்சினையை இல்லாமல் செய்வேன். சஜித் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டார். விசேட தேவையுடையவர்களது அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். வீடுகள், காணிகள் இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பேன். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிப்பிரச்சினைக்கும் சிறந்ததொரு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் .

30 வருடக் கொடிய யுத்தத்தில் நானும் என் தந்தையை இழந்தேன். அதேபோல் தான் இங்குள்ள இலட்சக்கணக்கான மக்கள் நீங்கள் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் இந்த யுத்தத்தின் மூலம் இழந்திருபீர்கள். அதன் கவலை எனக்குப் புரிகிறது. எனவே பிரிபடாத இலங்கைக்குள் சிறந்த ஒற்றுமை மிக்க சூழலை உருவாக்கி சுதந்திரமாக இந்நாட்டில் ஒருகுடையின் கீழ் வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வேன்.

இனவாதம், மதவாதம் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும். அரசியலமைப்பில் ஒருமித்த நாடு, ஒருமைப்பாடு என்றெல்லாம் குறிப்பிடப்பட்டாலும் அது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வர வேண்டும். அப்போதுதான் அது சிறப்பாக அயைும்.

எதிர்த் தரப்பினர் ஒருமித்தநாடு, ஒருமைப்பாடு என்று சொல்கின்றனர். நானும் ஒரு இலட்சம் அளவுக்கு ஏற்றுக் காெள்கிறேன். ஆனால் அது அரசியலமைப்பில் இருந்தாலும் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருகுடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒருமித்தநாடு, ஒருமைப்பாடு என்ற விடயத்தை நாங்கள் உருாக்குவோம். இந்நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்வோம் மதவாதத்தை இல்லாமல் செய்வோம்.

எதிர்த் தரப்புவாதிகள் இனவாதத்தை தூண்டி சூழ்ச்சிகளை செய்கின்றனர். எதிர்காலத்தில் அதற்கான சட்ட நடவடிக்கையை எடுத்து இந்நாட்டில் முற்றாக இனவாதத்தை இல்லாமல் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையை எடுப்பேன். அனைவரையும் ஒருதாய் மக்களாய் பார்க்கும் நாட்டை ஒருவாக்கும் யுகத்தை நாம் உருவாக்க வேண்டும். முல்லைத்தீவு மக்களிடம் ஒன்றைக் கூறுகிறோன் புதிய இலங்கையை கட்டியெழுப்ப நீங்கள் எங்களோடு கைகோர்த்துக் கொள்ளுக்குங்கள். நான் ஜனாதிபதியாக வந்ததும் இந்த மண்ணுக்கு அபிவிருத்தியைக் கொண்டு வருவேன். என தெரிவித்தார் 

இந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர்க்லான் ரிசாத் பதியுதீன் , ரஹுப் ஹக்ஹீம் , விஜயகலா மகேஸ்வரன் முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38