UPDATE : 200 கிலோவுக்கு மேற்பட்ட போதைப்பொருளை கைப்பற்றிய கடற்படை 

Published By: Vishnu

04 Nov, 2019 | 07:13 PM
image

(எம்.எப்.எம்,பஸீர்)

தெற்கு கடற் பரப்பில் 268.9992 கோடி ரூபா பெறுமதியான 224.166 கிலோ ஹெரோயின் போதைப் பொருளினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

மீனவப் ஆழ் கடலில் மீனவப் படகொன்றிலிருந்து குறித்த  ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன்போது அப்படகில் இருந்த ஐவரும், அப்படகிலிருந்து கரைக்கு ஹெரோயின் தொகையை எடுத்துவர  அந்த நேரம்  மீனவப்படகை நெருங்கிய டிங்கிப் படகில் இருந்த  இருவருமாக 7 சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டதாக  கடற்படை ஊடகப் பேச்சாளர்  லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.  

பாகிஸ்தனைலிருந்து குறித்த போதைப் பொருள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து மீனவப் படகுக்கு வேறு கப்பலில் இருந்து அந்த ஹெரோயின் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிகப்பதாகவும், இதனுடன் தொடர்புடைய அவ் வலையமைப்பின் இலங்கை பிரதி நிதிகளான மூன்று முக்கிய  சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இன்று நண்பகல் பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும் கடற்படை பேச்சாளர்  லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டாரவும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 7 நபர்களையும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு, டிங்கிப் படகு மற்றும் செய்மதி தொலைபேசி ஒன்று, 7 கையடக்கத் தொலைபேசிகள்,  ஜீ.பி.எஸ். உபகரணங்கள் மூன்று  போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55