மின்சாரசபை ஊழியர்களை குழுவொன்று தாக்கியதில் அறுவர் வைத்தியசாலையில்

Published By: Digital Desk 4

04 Nov, 2019 | 05:14 PM
image

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் பணி நிமிர்த்தம் சென்ற மின்சாரசபை ஊழியர்களை இளைஞர் குழுவொன்று தாக்கியதில் அறுவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா ஆச்சிபுரத்தில் மின்சார கட்டணத்தினை பல மாதங்களாக செலுத்தாது அதிகளவு நிதி தேக்கமுள்ளவர்களது மின் இணைப்புக்களை துண்டிக்கும் பணிக்காக மின்சார சபை ஊழியர்கள் சென்றிருந்தபோது அக்கிராமத்தில் வசிக்கும் சில இளைஞர்கள் மின்சார சபை ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதுடன் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக காயங்களுக்குள்ளான ஆறு மின்சார சபை ஊழியர்களை வவுனியாவில் இருந்து சென்ற மின்சாரசபை குழுவொன்று தமது வாகனத்தில் ஏற்றி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மின்சாரசபையின் வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் திருமதி மைதிலி தயாபாரனிடம் கேட்டபோது,

கடமையின் நிமிர்த்தம் சென்ற எமது ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள ரவுடிக்கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளனர். வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த அறுவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வவுனியா மாவட்டத்தில் மின்சார கட்டணங்களை செலுத்தாது அதிகளவு நிதி தேங்கமுள்ளவர்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இது வழமையான செயற்பாடு. 

இக் கடமையை செய்து வந்தவர்களையே ரவுடிக்குழுவொன்று தாக்கியுள்ளதுடன் அவர்களை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்து வந்தபோது குறித்த குழு எமது ஊழியர்களை பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சிலரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59