வாக்களிப்பை புறக்கணிக்க கோருவது சட்டமீறலாகும் : ரோஹண ஹெட்டியாராச்சி செவ்வி

04 Nov, 2019 | 11:59 AM
image

அரசியல் காரணங்களுக்கான தீர்மானத்தின் அடிப்படையில் வாக்களிப்பை புறக்கணிக்குமாறு நாட்டின் பிரஜைகளை கோருவது சட்டத்தினை மீறும் நடவடிக்கையாகவே இருக்கும். அத்துடன் வாக்கெடுப்பில் பங்கெடுக்காது விடுவதன் மூலம் ஜனநாயக கடமையிலிருந்து பிரஜைகள் விலகிச் செல்லும் நிலைமையே ஏற்படும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வீரகேசரி வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார் அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி:- இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளனவே?

பதில்:- 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மேலும் பதிவாகுவதற்கான ஏதுநிலைகளே காணப்படுகின்றன. குறிப்பாகரூபவ் தோதல்கள் ஆணைக்குழுவிற்கும்ரூபவ் எமக்கும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. இவ்வாறு முறைப்பாடுகள் அதிகளவில் பதிவாகின்றமையை நாம் மையப்படுத்தி தேர்தல் முறைகேடான நிலைமைக்குச் சென்றுள்ளது என்ற கொள்ள முடியாது. காரணம்ரூபவ் இம்முறை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் பெப்ரல் போன்ற தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்களும் முறைப்பாடுகளை அளிப்பதற்கு பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளன.

குறிப்பாக, தொலைபேசி மூலமாக, இணையம் மூலமாக, நேரடியாக என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமைக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகமாக கிடைக்கின்றன. உண்மையிலேயே தேர்தல் சட்டங்கள் தொடர்பில் மக்கள் விழிப்படைந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்வதோடு ஜனநாயக பண்புகளை பாதுகாப்பதை ஒவ்வொரு பிரஜையும் தனது கடமை என்பதை உணர்ந்திருக்கின்றமையையே வெளிப்படுத்துகிறது.

கேள்வி:- அரச சொத்துக்களை பயன்படுத்துவது தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றவை?

பதில்:- ஆம், கடந்த தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைப்போன்றே அரச வளங்களை தேர்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. 2015 தேர்தல்களில் எவ்வாறு அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று தான் இம்முறையும் அரச வளங்கள் தேர்தல் செயற்பாடுகளுக்காக வெகுவாக பயன்படுத்தப்படுகின்றன. அதனை கட்டுப்படுத்த முடியாதவொரு நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கின்றது. இருப்பினும் இம்முறை அரச வளங்களை தேர்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துபவர்கள் தொடர்பில் பொதுமக்களே முன்வந்து முறைப்பாடுகளை வழங்கும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே எதிர்காலத்தில் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதை குறைவடைச்செய்வதற்கு மக்களின் விழிப்புணர்வு இன்றி அமையாததாகவுள்ளது.

கேள்வி:- இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சமூக ஊடகங்களின் வகிபாகம் அதிகரித்துள்ள நிலையில் அதுபற்றி பிரத்தியேக கண்காணிப்பில் ரூடவ்டுபடுகின்றீர்களா?

பதில்:- முதற்தடவையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இருகுழுக்களாக இந்தக் கண்காணிப்பு இடம்பெறுகின்றது. தெரிவு செய்யப்பட்ட 12,500 முகநூல் பக்கங்களை செயற்பாட்டு கண்காணிப்பதோடு ஏனையவற்றை பொதுவான முறையில் கண்காணிக்கன்றோம்.

குறிப்பாக, வெறுப்பூட்டும் பேச்சுகள், தவறான தகவல்களை பரப்புதல், பொய்யான பிரசாரங்கள் ஆகியன தொடர்பிலேயே அதிகளவு கரிசனை கொண்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் நாளொன்றுக்கு பத்து வரையில் கண்டறியப்படுகின்றன. எமது கண்காணிப்பில் கிடைக்கப்பெறும் பதிவுகளை ஒவ்வொரு நாளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கின்றோம்.

கேள்வி:- பொதுவாக கடந்த தேர்தல்களில் வன்முறைகள் அதிகமாக காணப்பட்டிருந்த நிலையில் இம்முறை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்:- தேர்தல் சட்டங்களை மீறும் முறைப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, வன்முறைகள் எவையும் நடைபெறாத நிலைமையே தற்போதுவரையில் நீடிக்கின்றது. அத்துடன் வன்முறைகள் தொடர்பான பதிவுகளும் சொற்ப அளவில் கூட இல்லாத நிலைமையே காணப்படுகின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் ஊடாக ஒருவரின் தனிப்பட்ட கௌரவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தல், புனையப்பட்ட தகவல்கள் ஊடாக நபரொருவருக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுதல் போன்ற உள ரீதியான வன்முறைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அதுதொடர்பான பதிவுகளும் அதிகமாக காணப்படுகின்றன.

கேள்வி:- சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் இணைந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றீர்களா?

பதில்:- சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பெப்ரல் அமைப்பு இணைந்த பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. தற்போது வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தினைச் சேர்ந்த 95 பேர் கொண்ட காண்காணிப்பாளர்கள் குழுவொன்று வருகை தந்திருக்கின்றது. இதனை விட பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்பாளர்கள் குழுவொன்று வருகை தரவுள்ளது. அத்துடன் அன்பல் சர்வதேச கண்காணிப்பு அமைப்பும் வருகை தரவுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 150இற்கும் அதிகமான சர்வதேச கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனைவிட தபால் மூல வாக்களிப்பு கண்காணிப்பு பணிகளுக்காக ஆயிரம் பேரையும் ஒட்டுமொத்தமான கண்காணிப்பு பணிகளுக்காக இம்முறை ஆறாயிரம் பேரையும் எமது அமைப்பு ஈடுபடுத்தவுள்ளது.

கேள்வி:- இனக்குழுவொன்றின் அபிலாஷைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் வேட்பாளர்கள் கரிசனை கொண்டிருக்காத நிலையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடொன்று மேலெழுவது பற்றி?

பதில்:- தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் அல்லது மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கக் கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அவ்வாறு நிலைப்பாட்டினை எடுத்து மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுப்பதானது சட்டத்தினை மீறும் செயற்பாடாகவே அமையும். ஆனால் இலங்கையில் வாக்காளர் ஒருவர் வாக்களிக்க வேண்டும் என்று சட்டங்கள் இல்லை. நபரொருவர் வாக்களிக்க விரும்பாது விட்டால் அவர் ஒதுங்கி இருக்கலாம். ஆனால் இன்னொருவரை வாக்களிக்க விடாது தடுப்பது அல்லது அவரது சுய விருப்பில் தலையீடு செய்வது குற்றமாகும். மேலும் அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு உட்பட்டு தேர்தல் வாக்கெடுப்பில் வாக்காளர்கள் பங்கேற்காது விடுவதானது அவர்கள் ஜனநாயக கடமையிலிருந்தும் நாட்டின் பிரஜை என்ற பொறுப்பிலிருந்தும் விலகிச் செல்வதற்கே வழிவகுக்கும். அவ்வாறான நிலைமை ஏற்படுவதானது துரதிஸ்டவசமானதாகும்.

கேள்வி:- இம்முறை ஜனாதிபதித் தேர்தல் என்றுமில்லாதவாறு 35 வேட்பாளர்கள் போட்டிக்களத்தில் உள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அனைவரும் நாட்டின் மீதான பற்றில் போட்டியிடுவதற்கு முன்வரவில்லை. தமது தனிப்பட்ட சுயலாபத்தினையும் மறைமுகமாக கொண்டே இருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாட்டால் ஜனநாயகம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே இவ்வாறு பலர் களமிறங்குவது மீண்டுமொரு தடவை ஏற்படாது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததும் நாம் ஜனாதிபதித் தேர்தல் சட்டம் தொடர்பில் மறுசீரமைப்பு யோசனைகளை முன்வைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

கேள்வி:- இந்த தேர்தலில் கொள்கைகளுக்கான முக்கியத்துவத்தினை விடவும் சிங்கள தேசிய வாதம்ரூபவ் பௌத்தமதம்ரூபவ் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் மட்டுமே பேசுபொருளாகியுள்ளமையை அவதானித்துள்ளீர்களா?

பதில்:- ஆம், சில தரப்புக்கள் இந்த விடயங்களைத் தான் முன்னிலைப்படுத்தி பிரசாரங்களை மேற்கொள்கின்றமையை அவதானித்துள்ளோhம். நாட்டின் தலைவர் ஒருவர் சிங்களவர்களுக்கோ, தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ மட்டும் தனியாக தலைவராக தெரிவு செய்யப்படுவதில்லை.

ஆகவே இன, மத, குல, மொழி போன்ற வரையறுக்குள் நின்று நாட்டின் தலைவரை தெரிவு செய்ய முடியாது. நாட்டின் தலைவர் கொள்கை வழியில் எதிர்காலச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பாரா, நாட்டின் எதிர்காலத்திற்கு பொருத்தமானவராக இருப்பாரா என்பது பற்றி ஆராய்ந்தே வாக்காளர்கள் தமது தீர்மானங்களை எடுக்கவேண்டும். இந்த மக்கள் பிளவு படுத்தும் விடயங்களிலிருந்து ஒதுங்கியிருப்பதே சிறந்ததாகும்.

(நேர்காணல்:- ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13