நிலக்கரிக்கு அடிமையாவதிலிருந்து ஆசிய நாடுகள் விடுபட வேண்டும் - ஐ. நா.செய­லாளர் நாயகம்

04 Nov, 2019 | 11:18 AM
image

ஆசிய நாடுகள் கால­நிலை மாற்றம் தொடர் ­பான பிரச்­சி­னையை முறி­ய­டிக்க தாம் நிலக்­க­ரிக்கு அடி­மை­யா­வ­தி­லி­ருந்து விடு­பட வேண்டும் என ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ குட்­டரெஸ் எச்­ச­ரித்­துள்ளார்.

தாய்­லாந்தின் பாங்கொக் நகரில்  நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­படி எச்­ச­ரிக்­கையை விடுத்­ துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆசிய பிராந்­தி­ய­மா­னது  காலநிலை மாற்றத்­திற்குக் கார­ண­மான பூகோள வெப்­பமா­தலால் மிகவும் பாதிக்­கப்­படும் பிராந்­தி­யங்கள் மத்­தியில் உள்­ள­தாக  தெரி­வித்த அவர்,  அதனால் அந்தப் பிராந்­தியம்  கால­நிலை மாற் றப் பிரச்­சி­னையை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­களில் முன்­வ­ரி­சையில் நிற்­க­வேண்­டி­யுள்­ள­தாக கூறினார்.

கால­நிலை மாற்றத்தால் ஏற்­படும் வெள்ள  அனர்த்த அபா­யத்தை ஆசிய நாடுகள் எதிர்­கொண்­டுள்­ளமை  புதிய ஆய்­வொன்றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

கால­நிலை மாற்றம் கார­ண­மாக 2050 ஆண்­டுக்குள்  கடற்­க­ரை­யோ­ர­மாக வசிக்கும் மில்­லி­யன் ­க­ணக்­கான மக்கள் வெள்ள அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக அவர் அண்­மையில் வெளியான  கால­நிலை மாற்றம் தொடர்­பான ஆய்­வ­றிக்­கையை மேற்­கோள்­காட்டி குறிப்­பிட்டார். சீனா, பங்­க­ளாதேஷ், இந்­தியா, வியட்நாம், இந்­தோ­னே­சியா மற்றும் தாய்­லாந்து ஆகிய 6 ஆசிய நாடுகள்  நிலக்­கரி பயன்­பாட்டால்  வெளிப்­படும் பச்சை இல்ல வாயுக்­களால் ஏற்­பட்ட கால­நிலை மாற்­றத்தால்  2050ஆம் ஆண்டுக்குள்  கரை யோர வெள்ளப்பெருக்கு அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆசிய நாடுகளில் நிலக்கரி பிரதான சக்தி வளமாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52