மி­லே­னியம் சவால் குறித்து கோத்­தாவின் நிலைப்­பாடு என்ன ? - ஐ.தே.க. கேள்வி

Published By: Digital Desk 3

04 Nov, 2019 | 10:56 AM
image

(எம்.மனோ­சித்ரா)

மிலே­னியம் சவால் ஒப்­பந்தம் பற்­றிய நிலைப்­பாட்டை பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ இது­வ­ரையில் வெளிப்­ப­டுத்­தா­தது ஏன் என்று கேள்­வி­யெ­ழுப்­பிய ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க  நாட்டின் மீது பொறுப்பு இருக்­கி­றது என்றால் விரைவில் அவ­ரது தீர்­மா­னத்தை அறி­விக்க வேண்டும் என்றும் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அவர்  இதனைத் தெரி­வித்தார்.  அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்

தற்­போது மிலே­னியம் சவால் (எம்.சி.சி) ஒப்­பந்தம் பெரு­ம­ளவில் பேசப்­ப­டு­கி­றது. எனினும் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் அதன் பின்னர் சர்­வ­தே­சத்­துடன் ஏற்­க­னவே செய்து கொள்­ளப்­பட்­டுள்ள ஒப்­பந்­தங்கள்  எதிர்­கா­லத்தில் செய்து கொள்­ளப்­ப­ட­வுள்ள ஒப்­பந்­தங்கள் குறித்து ஆரா­யப்­படும் என்றும் சஜித் தெளி­வாக கூறி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான சர்­வ­தேச ஒப்­பந்­தங்கள் நாட்­டுக்கு ஏற்­பு­டை­ய­வையா என்­பது உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் ஆராய வேண்­டிய தேவை    சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு இருக்­கி­றது. எனவே நாட்­டுக்கோ , மக்­க­ளுக்கோ பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு ஒப்­பந்­தத்­திலும் சஜித் கையெ­ழுத்­திட மாட்டார்.

எம்.சி.சி ஒப்­பந்­தத்தை புறக்­க­ணிப்பேன் என்று பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ எந்த சந்­தர்ப்­பத்­தி­லா­வது தெரி­வித்­தி­ருக்­கி­றாரா? விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் மூலம் எம்.சி.சி ஒப்­பந்தம் பற்றி பேச வைக்கும் கோத்­தா­பய எந்த சந்­தர்ப்­பத்­திலும் நேர­டி­யாக அமெ­ரிக்­கா­வுக்கு எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. இந்த ஒப்­பந்தம் தொடர்பில் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே நேர­டி­யாக அவ­ரது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்த வேண்டும். காரணம் அவர் தான் அமெ­ரிக்க பிர­ஜை­யாக இருக்­கிறார்.

உண்­மையில் இலங்கை மீது நேசமும் பொறுப்பும் அவ­ருக்கு இருக்­கி­றது என்றால் அவர் தனது நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும். இந்த நிலைப்­பாட்டில் நாம் உறு­தி­யா­கவே இருக்­கின்றோம். இம்­மாதம் 17 ஆம் திகதி சஜித் பிரே­ம­தாச தேர்­தலில் வெற்றி பெற்­றதன் பின்னர் சந்­தேகம் காணப்­படும் விட­யங்­களை மீண்டும் தெளி­வு­ப­டுத்­துவார்.

கேள்வி : தேர்­த­லுக்கு முன்னர் எம்.சி.சி ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். இது குறித்து உங்கள் நிலைப்­பாடு ?

பதில் : இது வரையில் அவ்­வா­றா­ன­தொரு தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. சில ஊட­கங்­களில் அவ்­வா­றான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எடுக்­கப்­பட்ட தீர்­மானம் அல்ல.

கேள்வி : கடந்த வாரம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க , சஜித் ஜனா­தி­ப­தி­யா­னாலும் நானே பிர­தமர் என்று கூறி­யி­ருக்­கிறார். இது தொடர்பில் கட்சி ரீதியில் ஏதேனும் தீர்­மா­னங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா ?

பதில் : இது பிரதமரை தெரிவு செய்வதற்கான போராட்டம் அல்ல. எனவே ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் பிரதமர் யார் என்பது பற்றி சிந்திக்கலாம். அதற்கு போதிய காலம் இருக்கிறது. அரசியலமைப்பின் படி புதிய ஜனாதிபதி அது குறித்து தீர்மானிப்பார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15