யாழ்ப்பாணத்தில் தேர்தல் - இரு பிசாசுகள் மத்தியிலான மோதல்

Published By: Rajeeban

03 Nov, 2019 | 04:52 PM
image

சண்டே டைம்ஸ்

தமிழில் ரஜீபன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களை எதிர்கொண்டாலும் வாக்காளர்களின் ஆர்வம் கோத்தாபய ராஜபக்சவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலானதாக காணப்படுகின்றது.

வேடிக்கையான விதத்தில் பலர் மேற்குறிப்பிட்ட இருவரையும் தீயசக்திகளின் பட்டங்களை சூட்டியே குறிப்பிடுகின்றனர்.

கோத்தாபய ராஜபக்ச அச்சம்தரும் பேய் எனவும் சஜித்பிரேமதாச வெறுக்கிற பேய் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வாக்காளர்கள் எந்த பேய் குறைந்தளவு ஆபத்தானது- ஜனாதிபதியாக அவர்கள் தெரிவு செய்வதற்கு சிறந்தது என  தங்களிற்குள் பேசிக்கொள்கின்றனர்.

பல வழிகளில் குடாநாட்டில் அவர்கள் பிசாசிற்கும் ஆழமான பாக்குநீரிணைக்கும் அல்லது மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் சிக்குண்டுள்ளனர்.

ராஜபக்ச தனது சர்ச்சைக்குரிய கடந்த காலத்திற்காக மாத்திரம் இந்த பட்டப்பெயரை பெறவில்லை.அவர் பிரிவினைவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த விதத்திற்காக அவ்வாறு அழைக்கப்படுகின்றார்.

அதேவேளை அவரது பிரச்சாரத்தில் இடம்பெற்றுவரும் மிகபெரும் பிழையொன்று அந்த விடயங்களிற்கு புத்துயுர் அளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிகவும் கடுமையான சர்ச்சைக்குரிய இராணுவஅதிகாரிகள் தற்போது அவரிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பழைய காயங்களை கிளறியுள்ளனர்.

யுத்தத்தின் வலிகளை அனுபவித்த குடும்பங்களின் காயங்கள் மீண்டும் கிளறப்படுகின்றன.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இந்த பகுதிகளில் சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்,அவர்களின் நடவடிக்கைகளிற்காக மக்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.

நான் உரையாடிய பல பொதுமக்கள் தங்களை அடையாளப்படுத்தவேண்டாம் என தெரிவி;த்தனர். தாங்கள் பழிவாங்கப்படக்கூடும் என அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

ஆயுதம் ஏந்தாத தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டதை ஒருவர் நினைவுகூர்ந்தார்.

சிலர் தங்களை அங்கவீனர்களாக்கிய அல்லது கண்பார்வை இழக்கச்செய்த அல்லது தற்போது ஆறிவிட்ட காயங்களை காண்பித்தனர்.

சில சம்பவங்கள் சொல்வதற்கே கொடுரமானவை.

அரச அதிகாரிகளும் குறிப்பிடத்தக்க அளவில் கருத்து தெரிவித்தனர்.

உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரியொருவர்  தங்களை அச்சுறுத்தி மிரட்டி வேலை வாங்கினார் என அவர்கள் தெரிவித்தனர்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் மீண்டும் அவ்வாறான நிலை உருவாகலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

யாழ்;ப்பாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு என உள்ளுர் அமைப்பாளர்கள் எவரும் இல்லாததால்  ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவிக்கும் அனைத்தும் கட்சிக்கு எதிர்மறையானதாகவே மாறுகின்றது.

கோழிகள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு நரிகளை பயன்படுத்துவது போல இது உள்ளது.

ராஜபக்ச காலத்து சாதனைகள்

இந்த விடயத்தில் துயரமான முரண்நகையொன்றுள்ளது.வவுனியாவிற்கு அப்பால் காங்கேசன்துறை வரை வீதிகளை அபிவிருத்தி செய்தது ராஜபக்ச அரசாங்கமே.

இதற்கு அப்பால் அந்த நிர்வாகம் வவுனியா முதல் காங்கேசன்துறை வரையியிலான புகையிரதப்பாதைகளை அபிவிருத்தி செய்தது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் துரித போக்குவரத்திற்கு உதவக்கூடிய விதத்தில் ஸ்திரமான புகையிரத பாதைகள் அமைக்கப்பட்டன.வடக்கு தெற்கு மக்களிற்கு இந்த நடவடிக்கைகள் பெருமளவிற்கு உதவின.

இன்றைய புதிய யாழ்ப்பாணத்திற்கு இவையே காரணம்.

அதன் பின்னர் மாகாணசபையை உருவாக்கியதன் மூலம் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியது.

இங்குள்ள மக்களின் வாழ்க்கையை பெருமளவில் மாற்றிய இந்த சாதனைகளை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பயன்படுத்தவில்லை.

இந்த சாதனைகளின் பின்னர் ராஜபக்ச அரசாங்கம் எங்களை மறந்துவிட்டது,அவர்கள் சமாதானத்திற்காக எதனையும் செய்யவில்லை நாங்கள் மோசமான தீமைகளான போதைப்பொருள் மற்றும் மதுபாவனை அதிகரிப்பை சந்தித்தோம் என்கின்றார் அருள்.

வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கின்றது எங்களது படித்த இளைஞர்களிற்கு வேலையில்லை அவர்கள் கூலி வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவிக்கின்றார்.

தங்களுடைய வேட்பாளர் வென்றால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தின் பெயரை மாற்றுவோம் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த உணர்வுகளை தீவிரப்படுத்தும் இன்னொரு விடயம்  உள்ளது.

உலகின் எந்த பகுதியிலும் வேறு வேறு நபர்கள் வெளியிடும் பத்திரிகைகள் வேறு வேறு விதமான நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும்.

யாழ்ப்பாணத்தில் அதிகம் வாசிக்கப்படும் மூன்று பத்திரிகைகள் பல்வேறு விடயங்கள் குறித்து மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

ஆனால் ராஜபக்சாக்கள் விடயத்தில் அவர்கள் ஐக்கியப்பட்டுள்ளனர் எதிர்க்கின்றனர்.

சிலர் மிக தீவிரமாக எதிர்க்கின்றனர்.

சமீப வாரங்களில் இந்த செய்தித்தாள்கள் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை வாசகர்களிற்கு நினைவுபடுத்தியுள்ளன, ராஜபக்சவிற்கு வாக்களிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த வழமைக்கு மாறான ஒற்றுமை பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் சந்கேத்தை ஏற்படுத்தியுள்ளது,மறைமுக கரமொன்று இதனை தூண்டுகின்றது என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

எங்களிற்கு தெரியும் ஆனால் மேலும் இது குறித்து தெரிவிக்கவிரும்பவில்லை என குறிப்பிட்டார் ஒரு பாதுகாப்பு அதிகாரி.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த விடயங்களிற்கு தீர்வை காண தவறியுள்ளது.

நான் உரையாடிய பலர்  பிரேமதாசவை குறைந்தளவு தீமையான சக்தி என குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04