நாட்டில் 6 நாட்களாக தொடர்ந்து பெய்த கடுமையான மழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொழும்பில் 45 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

அத்துடன் சீரான காலநிலை ஏற்பட்டதனை தொடர்ந்து சுமார் 3 இலட்சத்திற்க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதன்படி 15 ஆயிரத்து 782 குடும்பங்களை சேர்ந்த 62 ஆயிரத்து 244 பேர் இன்னமும்  முகாம்களில் தஞ்சம் புகுந்தள்ளனர். வெள்ளம் வடிந்தோடியதன் பின்னரும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 703 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலைமையிலேயே உள்ளனர்.  மேலும் 4155 வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளதாகவும் அனர்த்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்களினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக பாதிப்படைந்துள்ளன.