பொதுமக்களிடமிருந்து சமர்ப்பித்தல்கள் பெறும் கால எல்லை நீடிப்பு.!

Published By: Robert

27 May, 2016 | 02:32 PM
image

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் பொருட்டு, உண்மைகளை கண்டறிவதற்காக நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி பொது மக்களிடமிருந்து சமர்ப்பித்தல்களை பெற்றுக் கொள்ளும் கால எல்லையை எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

தகவல்கள் மற்றும் சமர்ப்பித்தல்கள் பொது மக்களினால் தனியாகவோ குழுவாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ சமர்பிக்க முடியும். இரகசியங்கள் பேணப்பட வேண்டுமாயின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி அதற்கான உறுதிமொழியை வழங்குவதாக செயலணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி  கடந்த ஜனவரி மாதம் பிரதமரினால் ஸ்தாபிக்கப்பட்டது. உண்மைகளை கண்டறிந்து நீதியை நிலை நாட்டல், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல், நல்லிணக்கத்திற்கான பொறிமுறையை ஸ்தாபிக்க பொது மக்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்வதே செயலணியின் பணியாகும்.

இவற்றை மையப்படுத்தி, காணாமற்போனோர் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு உள்ளிட்ட விஷேட வழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதி பொறிமுறையை ஏற்கனவே செயலணி ஸ்தாபித்துள்ளது. 

இந்நிலையில், உண்மை மற்றும் நீதியை கண்டடைந்து பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி இழப்பீடுகளை பெற்றுக் கொள்ளல் தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள் செயல்முறை நடவடிக்கைகள் பற்றி பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் தற்போது கோரப்படுகின்றது. சமர்பித்தல்களை பொது மக்கள் தனி நபராகவோ, சமூக அமைப்புகளாகவோ அல்லது குழுக்காளாகவோ மும்மொழிகளிலும் சமர்பிக்க முடியும். சமர்பித்தல்களுக்கான இறுதி திகதி மே மாதம் 1 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் கால எல்லை தற்போது எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சமர்ப்பணங்களை ctf.srilanka@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அல்லது  கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து, செயலாளர், நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி,  நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், குடியரசு கட்டிடம், இலக்கம் - 01, சேர்.பரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு - 01 என்ற முகவரிக்கு  அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21