2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணம் யாருக்கு? - இறுதிப் போட்டி இன்று

Published By: Vishnu

02 Nov, 2019 | 10:46 AM
image

றக்பி  உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமான 09 ஆவது றக்பி உலகக கிண்ணத் தொடரில் ஆர்ஜெண்டீனா, அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, பீஜி, பிரான்ஸ், ஜோர்ஜியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நமீபியா, நியூஸிலாந்து, ரஷ்யா, சாமோ, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, டொங்கா, உருகுவே, அமரெிக்கா மற்றும் வேல்ஷ் உட்பட மொத்தம் 20 நாடுகள் கலந்து கொண்டன. 

இத் தொடரில் முதலாவதாக நடந்த அரையிறுதிப் போட்டியொன்றில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வேல்ஸை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணியும் இறுதிப் போட்டியில் நுழைந்தன.

இந் நிலையில் இறுதிப் போட்டியானது இன்றைய தினம் யோகோஹாமாவில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமாகவுள்ளது.

உலக றக்பி தரவரிசைப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி, றக்பி உலகக் கிண்ணத் போட்டிகளில்  இறுதிப் போட்டிக்குள் நுழைவது இது 3 ஆவது சந்தர்ப்பமாகும்.

கடந்த 1995 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூஸிலாந்தை 15:12 என்ற கணக்கிலும், 2007 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் 15:6 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியும் சம்பியன் ஆகியிருந்தது.

இதேவேளை உலக றக்பி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, றக்பி உலகக் கிண்ணத் போட்டிகளில்  இறுதிப் போட்டிக்குள் நுழைவது இது  4 ஆவது சந்தர்ப்பமாகும்.

கடந்த 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்திய இங்கிலாந்து 20:17 என்ற கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் ஆகியிருந்தது. அத்துடன் 1991 ஆம் ஆண்டு அதே அவுஸ்திரேலியாவுடன் இறுதிப் போட்டியில் 12:6 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. மேலும் 2007 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் 15:6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22