ராஜ்கிரணின் ‘குபேரன்’

Published By: Daya

01 Nov, 2019 | 04:23 PM
image

கிராமத்து நாயகன் ராஜ்கிரண் மற்றும் மலையாள சுப்பர் ஸ்டார் மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படத்திற்கு ‘குபேரன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் அஜய் வாசுதேவ் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘குபேரன்’. இந்த படத்திற்கு மலையாளத்தில் ‘ஷைலொக்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி, பணக்கார கஞ்சனாக நடிக்க, அவருக்கு இணையான வலிமையான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். இதில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருக்கிறார்.

நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் நடிகை மீனா இணைந்து நடித்திருக்கிறார். அதன்பிறகு இவ்விருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘குபேரன்’ இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

மம்மூட்டி, ராஜ்கிரண் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு தற்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35