முதல் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து

Published By: Vishnu

01 Nov, 2019 | 12:24 PM
image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கிடையில் முதலாவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட் சர்ச்சில் இன்று நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் களத்தடுப்பை தேர்வுசெய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை குவித்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் அதிகபடியாக ரோஸ் டெய்லர் 35 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோர்தன் 2 விக்கெட்டுக்களையும், சாம் கர்ரன், அடில் ரஷித், பிரவுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெயர்ஸ்டோ 35 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 59 ஓட்டங்களையும், மோர்கன் 34 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் வின்ஸ் தேர்வுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35