அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் இன்று 9 புதிய போட்டி சாதனைகள்

Published By: Digital Desk 4

31 Oct, 2019 | 09:24 PM
image

( நெவில் அன்தனி)

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒருவரான என். டக்சிதாக பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தில் புதிய சாதனை படைத்தார். 

அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டேறிதல் போட்டியில் புதிய சாதனையை நிலைநாட்டினார்.

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன.

போட்டியின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஏ. புவிதரன் புதிய சாதனை நிலைநாட்டிய நிலையில் அவரது கல்லூரியைச் சேர்ந்த டக்சிதா, இன்று இரண்டாவது நாளன்று சாதனை நிலைநாட்டியமை விசேட அம்சமாகும்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.35 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலம் டக்சிதா புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.

மகாஜனா கல்லூரி சார்பாக 2014இல் போட்டியிட்டு 3.32 மீற்றர் உயரம் தாவி ஜே. அனித்தா ஏற்படுத்திய சாதனையையே டக்சிதா முறியடித்து புதிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.

இப் போட்டியில் டக்சிதாவின் சக மாணவியான வி. விசோபிகா 3.10 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 15.95 மீற்றர் தூரத்தை;ப பதிவு செய்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

இந்த இரண்டு சாதனைகளுடன் மேலும் 9 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

இது இவ்வாறிருக்க 18 இன் கீழ் நீளம் பாய்தலில் கொண்டச்சி முஸ்லிம் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கே.பி. ஜெனுஷன (6.99 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் 20 இன் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் வத்தளை லைசியம் கல்லூரியைச் சேர்ந்த எல்ரோய் கமல் ராஜ் (7.19 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் 14 இன் கீழ் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாவெனல்லை ஸாஹிராவின் எம். ராக்கீஷ் (12.05 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் ஏசியன் இன்டர்நெஷனலின் அத்தீப் மொஹைதீன் (12.19 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58