தேர்தல் பிரசார நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனரா? - தெளிவுபடுத்திய பொலிஸ் தலைமையகம்

Published By: Vishnu

31 Oct, 2019 | 09:18 PM
image

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணத்தில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இரு பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக சில இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருக்கிறது. 

இந்த செய்தி தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெளிவுபடுத்துகையில், 

யாழ் - கோட்டை பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அந்த பிரதேசத்திற்கான வீதி பாதுகாப்பு, உயர்ந்த கட்டட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் என்பவற்றுக்காக இரு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் டீ.டி.ஆர்.தசநாயக்க மற்றும் யாழ் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரஷாந் பெர்னான்டோ ஆகியோரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

பிரசாரக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறித்த வேட்பாளர் இந்த பொலிஸ் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது , அதனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்திருந்த நபர் புகைப்படம் எடுத்து ' பொலிஸ் அதிகாரிகள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் ' என்று பொய்யான செய்தியை பரப்பியிருக்கிறார். 

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு பரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58