23 நாட்களுக்குள் 2250 முறைப்பாடுகள்; 11 பேர் வைத்தியசாலையில் 

Published By: Vishnu

31 Oct, 2019 | 09:00 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு 23 நாட்களுக்குள் 2250 முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகளவிலான  முறைப்பாடுகள்  தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே  பதிவாகியுள்ளதுடன்,  அவ்வாறான முறைபாடுகள் மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கே அதிகம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று புதன்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 23 நாட்களுக்குள் 2250 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1531 முறைபாடுகளும் , தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 719 முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 2143 முறைப்பாடுகளும் , தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 20 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை பெப்ரல் அமைப்பிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியிலிருந்து இன்று பிற்பகல் 4.30 வரையான காலப்பதுதியில் 188 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதில் 151 முறைபாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , 37 முறைப்பாடுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 300 முறைபாடுகளும் , சட்டமீறல்கள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் 325 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 24 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதுடன் இதனூடாக 28 சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகளின் போது காயமடைந்த நிலையில் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35