ஜனநாயக ரீதியில் புதிய பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்த சஜித்

Published By: Vishnu

31 Oct, 2019 | 07:34 PM
image

(ஆர்.யசி )

எதிர்வரும் 16ஆம்  திகதி உருவாகும் புதிய யுகத்தில் ஜனநாயக ரீதியில் புதிய பயணத்தை முன்னெடுக்க சகல மக்களும் கைகோர்க்க வேண்டும் என புதிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் இன்று கண்டியில் வெளியிடப்பட்ட வேளையில் அந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்களை பகிர்ந்து  மூவினமக்களையும்  நாட்டினையும்  நாம் காப்பாற்றுவதுடன்  மக்கள் சுதந்திரம் என்பதை வெறுமனே அரசியல் அமைப்பில் எழுத்தில் மாத்திரம் உள்ளடக்காது  அது நடைமுறையாகும் வகையில் எமது ஆட்சியை  நடத்துவோம் 

புரட்சிகர சமூக அரசியல் பொருளாதார மாற்றம் ஒன்றினை உருவாக்ககும் ஆரம்பமே இதுவாக்கும். இந்த நாட்டில் சகல இன மத மக்களின் எதிர்பார்ப்புமே பொருளாதார பலமும் அரசியல் இஸ்திரமும் கொண்ட பலமான இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். அது எப்போது நனவாகும் என்ற எண்ணமே மக்கள் அனைவர் மத்தியிலும் உள்ளது. மக்களுக்கு புதிய ஒளியை ஏற்படுத்திக்கொடுக்கவும் மக்களுக்கான நல்வாழ்வை உருவாக்கும் வகையில் எதிர்வரும் 16ஆம்  திகதி உருவாகும் புதிய யுகத்தில் ஜனநாயக ரீதியில் புதிய பயணமாக இது அமையும் எனலாம். 

எமது தாய்நாடு, எந்த வகையிலும் ஏனைய நாடுகளின் முன்னிலையிலும் அடிபணியாத நாடாகும். எனினும் ஏனைய சர்வதேச நாடுகளில்  தனிப்பட்ட கொள்கைக்குள் எம்மை அடக்க முயற்சிக்கும் கால சூல்நிலையில் எமது நாட்டின் அரசியல் சுதந்திரம், சகல மதங்கள், இனங்களை பாதுகாத்து பலமான ஐக்கிய நாட்டினை நாம் உருவாக்குவோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08