இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 206 ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பொலன்னறுவை ஹிங்குராங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ஹெலிகொப்டர் தரையிரைக்கப்படும்போதே விபத்துக்குள்ளானாதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.