கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி சாதனை

Published By: Digital Desk 3

31 Oct, 2019 | 02:02 PM
image

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரணடாம் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பாக போட்டியிட்ட சாவகச்சேரி இந்து கல்லூரியின் என். டக்சிதா புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

போட்டியின் முதலாம் நாளான நேற்றைய தினம் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இதே பாடசாலையைச் சேர்ந்த ஏ. புவிதரன் (4.82 மீ.) புதிய சாதனை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோலூன்றிப் பாய்தலில் 3.35 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலம் டக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டினார்.

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான ஜே. அனித்தா, 2014இல் மகாஜனா கல்லூரி சார்பாக போட்டியிட்டு 3.32 மீற்றர் உயரம் தாவி ஏற்படுத்திய சாதனையையே டக்சிதா இன்று முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.

இப் போட்டியில் டக்சிதாவின் சக பாடசாலை மாணவியான வி. விசோபிகா 3.10 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22