அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா : யாழ். மாணவன் புதிய சாதனை 

Published By: Daya

31 Oct, 2019 | 10:32 AM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவக்கச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. புவிதரன் புதிய போட்டி சாதனை நிலைநாட்டி வட மாகாணத்துக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் முதலாவது நாளான நேற்றைய தினம் புவிதரனின் சாதனையுடன் மேலும் 3 சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.

நேற்று காலை நடைபெற்ற கோலாகல ஆரம்ப விழா வைபவத்தின்போது கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். கேகாலை புனித மரியாள் கல்லூரி மெய்வல்லுர் வை.சி.எம். யோதசிங்க, இராஜகிரிய கேட்வே  கல்லூரி மெய்வல்லுநர் ஷெலிண்டா ஜென்சென் ஆகிய இருவரும் விளையாட்டு விழா தீபத்தை ஏற்றிவைத்தனர்.

முதலாம் நாள் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஏ. புவிதரன் 4.82 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.

அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன் 2016இல் ஏற்படுத்திய 4.61 என்ற சாதனையையே புவிதரன் நேற்று முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

4.87 மீற்றர் உயரத்தைத் தாவ புவிதரன் எடுத்த மூன்று முயற்சிகள் பலன் தராமல் போனது. இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் எஸ். சுகிகேதாரன் (4.40 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் மானிப்பாய் இந்து கல்லூரியின் எஸ். கபில்சன் (4.20 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் அரை இறுதி ஓட்டப் போட்டியை 48.73 செக்கன்களில் நிறைவு செய்த குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயத்தின் எஸ்; ஜயசுந்தர புதிய சாதனையைப் படைத்து தங்கப் பதகத்தை தனதாக்கினார்.

இவர் நேற்றுக் காலை நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் நிலைநாட்டிய 48.80 செக்கன்கள் என்ற சாதனையையே மாலையில் புதுப்பித்தார்.

ஆண்களுக்கான 14 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தலில் கம்பஹா செவன்த் டே அட்வென்டிஸ்ட் கல்லூரியைச் சேர்ந்த ஏ. மெஷாக் மிலோஷ் 1.75 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 66.63 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்த பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரியின் ருமேஷ் தரங்க புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41