நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

Published By: Vishnu

30 Oct, 2019 | 09:26 PM
image

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்பின்வருமாறு:

01. சிறுவர்களைப் பாதுகாத்தல் - தேசிய நம்பிக்கை நிதியை ஸ்தாபித்தல்

பல்வேறு காரணங்களினால் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உரிய வழிகாட்டியை வழங்குதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வளங்களை வழங்கும் நோக்கத்துடன் 'சிறுவர்களைப் பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை நிதியம்' என்ற பேரிலான அறக்கட்டளை , அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சிறுவர் தினம் இடம்பெற்ற அன்றைய தினத்தில் நன்கொடையாளர்களினால் 17 மில்லியன் ரூபா இந்த நிதியதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்தும் இந்த நிதியில்; வைப்பீடு செய்வதற்காக, சுயேட்சையாக பங்களிப்பு செய்வதற்கு விருப்பமுள்ள அமைச்சரவை அங்கத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் பணியாளர்களின் அங்கத்தவர்கள் மற்றும் அரச சேவை மற்றும் அரச கூட்டுத்தாபன சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் ஒரு நாள் சம்பளத்தை நிதியத்திற்கு நன்கொடையாக பெற்றுக் கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இரசாயன ஆயுத இணக்கப்பாடு மற்றும் இரசாயன பாதுகாப்பு இடரற்ற முகாமைத்துவம் தொடர்பான இரசாயன ஆயதங்களை தடை செய்யும் சர்வதேச அமைப்பின் ஆசிய அங்கத்துவ நாடுகளின் பிராந்திய மகாநாடு

அடிப்படை ரீதியில் ஆயுத ஒழிப்பு உடன்படிக்கையான இரசாயன ஆயுதத் தயாரிப்பு, மேம்படுத்துதல், ஒன்றுதிரட்டுதல் மற்றும் பாவனையை தடைசெய்தல் மற்றும் அவற்றை அழிப்பதற்கான சர்வதேச இணக்கப்பாடு, மறைமுக ரீதியில் இரசாயன அனர்த்த மற்றும் இரசாயன பொருளுடன் தொடர்புபட்ட பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக செயல் ரீதியில் பங்களிப்பு செய்தல். இலங்கை 1993ஆம் ஆண்டில் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைவாக 15 ஆசிய அங்கத்துவ நாடுகளின் பிரதிகள் 25 உள்ளுர் பிரதிநிதிகளின் பங்களிப்புடன், இரசாயன ஆயுத இணக்கப்பாடு மற்றும் இரசாயன பாதுகாப்பு இடரற்ற முகாமைத்துவம் தொடர்பான ஆசிய அங்கத்துவ நாடுகளின் பிராந்திய இரசாயன பிராந்திய மகாநாடு ஒன்று, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் இரசாயன ஆயுத இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்தும் தேசிய அதிகார சபையினால் இரசாயன ஆயதங்களை தடை செய்யும் சர்வதேச அமைப்பு மற்றும் அதனோடு இணைந்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 04 05 திகதிகளில் கொழும்பில் நடத்தவதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

03. பேண்தகு அபிவிருத்தி பயன்பாடு மற்றும் தயாரிப்பு தொடர்பான தேசிய கொள்கை

சுற்றாடலை பாதுகாத்து, இயற்கை வளங்களை பேண்தகு முகாமைத்துவத்தை மேற்கொள்டு மற்றும் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி கூடுதலான உற்பத்தியைப் பெற்றுக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக சேமநலத்தை மேம்படுத்தல், பேண்தகு அபிவிருத்தி பயன்பாடு மற்றும் உற்பத்தியின் நோக்கமாகும். பேண்தகு அல்லாத அபிவிருத்தியின் தாக்கத்தை கண்காணித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து பேண்தகு பயன்பாடு மற்றும் உற்பத்தி தொடர்பான இணக்கப்பாட்டின் பலவற்றிற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, பேண்தகு பயன்பாடு மற்றும் உற்பத்தியில் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த பேண்தகு பயன்பாடு மற்றும் தயாரிப்பு தொடர்பான தேசிய கொள்கை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

04.மொரகஹகந்த – களுகங்கை மகாவலி 'எவ்' வலய சேதனப் பசளையினால் விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்படும் பேண்தகு அபிவிருத்தி வலயமாக பெயரிடுதல்

மொரகாஹகந்த – களுகங்கை அபிவிருத்தி திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் லக்கல பல்லேகம் பிரதேசத்தில் குடியமர்த்தி மகாவலி 'எவ'; வலயமாக பெரிட்டு புதிய வலயமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை நீல பசுமை எண்ணக்கருவின் கீழ் உருவான கிராமமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் குடியமர்த்தப்படும் பொதுமக்களுக்கு விவசாய நடவடிக்கைகள், குடிநீர்த் தேவைக்காக, எந்தவித மனித வாழ்விடத்திற்கு அப்பால் நகல்ஸ் மலை ஊடாக வரும் நீர் உடனான களுகங்கை நீர் மூலம் நீர் வழங்கப்படுவதுடன் இந்த வலயம் சேதனப் பசளை பயன்பாட்டுடன் மாத்திரமும்; சுத்தமான நீர் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதனால் மொரகாஹகந்த – களுகங்கை இடது மற்றும் தெற்கு ஆற்றங்கறை குடியிருப்பு வலயம் அல்லது மகாவலி 'எவ'; வலயம் நச்சுத்தன்மையற்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளும் பேண்தகு அபிவிருத்தி வலயமாகவும் களுகங்கை மற்றும் அமம்பன் கஹா மேல் நீரேந்து பிரதேசம் நச்சுத்தன்மையற்ற நீருடனான மற்றும் சேதன பசளை பயன்பாட்டின் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடன்திட்டத்தின் வசதிகளை விரிவுபடுத்தல்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டமாக அரசாங்கத்தின் ஏனைய அபிவிருத்தி திட்டங்களுடன் ஒன்றிணைத்து முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதியளவில் 70ஆயிரம் மில்லியனுக்கும் மேற்பட்ட கடன் உதவியாக 40,240 பயனாளிகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மொத்த நிதி மற்றும் நிதி அல்லாத 22 பரிந்துரைகளின் 'மகே அநாகதய' என்ற எனது எதிர்காலம் கடன் திட்ட முறை கல்வி பொதுதத் தராதர பத்திர உயர்தர மாணவர்களுக்கு அப்பால் விரிவுபடுத்தி 'மாத்திய அருண' என்ற கடன்முறையை நடைமுறைப்படுத்தும் காலம் 2019.07.02 திகதி தொடக்கம் 2020.12.31 திகதி வரையில் நீடித்தும் 'ரன் அஸ்வென்ன', 'கொவி நவோதா', 'ஜய இசுறு', 'திரி சவிய', ஹஹரித்த நய' மற்றும் 'விசே காரக்க பிராத்தன' என்ற கடன் முறையின் கீழ் வழங்கப்படும் பினை பாதுகாப்பு ஆலோசனை முறையில் தேசிய சேமிப்பு வங்கியை உள்ளடக்கி இந்த கடன் திட்டத்தில் திருத்தை மேற்கொண்டு இந்த கடனை வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது எதிர்கொள்ளப்படும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளை குறைப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய பொருட்கள் , நீர் அறை மற்றும் உலோக மற்றும் பிவிசி ரகத்தில் நீரை பெற்றுக்கொள்வததற்கான மிடாவின் திறப்படைப்புக் குழாய் (Faucet) மற்றும் நிறுத்தும் ஒருவழி அடைப்புத் தடுக்கு (Valve) ஆகியவற்றுக்கான ஒழுங்குறுத்தல் நடைமுறையை முன்னெடுத்தல்

நீர் பாவனையாளர்களினால் தரமற்ற உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்படுவதினால் பெருமளவில் நீர் ஒழுக்கு இடம்பெறுவதினால் நீர் வீண்விரயமாவதுடன் . தரத்தில் குறைந்த பொருட்கள் ,தரமற்ற நீர் உதிர்ப்பாகங்கள் உள்ளுர் சந்தைக்குள் உள்வாங்கப்படுவதை தடுப்பதற்காக ஒழுங்குறுத்தப்பட வேண்டிய நீர் உதிர்ப்பாகங்கள் பல தொகுதிகள் இருப்பதாகவும் தேசிய நீர் விறியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேசிய நீர் உதிர்ப்பாகங்கள் தயாரிப்பாளர்களைப் போன்று சுற்றாடல் ரீதியில் நன்மை கிடைக்கக் கூடிய வகையில் பிரதான அரச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொமக்களினதும் நுகர்வோரினதம் கருத்துக்களின் அடிப்படையிலான, சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய பொருட்கள், நீர் அறை மற்றும் உலோக மற்றும் பிவிசி ரக நீரைப் பெற்றுக் கொள்ளும் மிடாவின் திறப்படைப்புக் குழாய் மற்றும ஒருவழி அடைப்புத் தடுக்கு (Valve) ஆகிய நீர் உதிர்ப்பாகங தொகுதிக்காக அடையாளங் காணப்பட்டுள்ள ஒழுங்குறுத்தல் முறையை நடைமுறைப்படுத்தவதற்காக நகரத் திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டபின்படிப்பு முகாமைத்துவ நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் கெ சாட் பல்கலைக்கழகத்தின்Kesat Saad University of Thailand வணிக நிர்வாக பீடத்திற்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

உயர்கல்வி துறையில் கல்வி புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை;கக்ழகத்தின் பட்ட பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் கெ சாட் பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாக பீடத்திற்கு இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்காக நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலங்கைக்கு மானியமாக வழங்கப்படவுள்ள பிலேமிங் நிதியத்திற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளுதல்

பன்முக பல்லின உயிரியியல் எதிர்ப்பு வலுவூட்டுதல் மற்றும் பல்லின உயிரியியல பயன்படுத்தப்படுதலை கண்டறிதல் நோக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசியாவிலும் ஆபிரிக்க நாடுகளுக்கும் உதவுவதற்காக பிரிட்டன் அரசாங்கத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படும் வேலைத்திட்டமான பிளோமிங் நிதியத்தின் மூலம் மானியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கமும் ஐக்கிய இராச்சியத்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கத்திற்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்காக சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. முத்துராஜவெலவில் அமைந்துள்ள 2 ஏக்கர் 3 ரூட் 34.51 பேர்ச் ஆன காணியொன்றை வரையறுக்கப்பட்ட இலங்கை கனிய வள முனையங்கள் நிறுவனத்திற்கு வழங்குதல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் தற்பொழுது முத்துராஜவெல மணல் நிரப்பும் பிரதேசத்தில் இலங்கை காணி அபிவிருத்தியை மேற்கொள்ளும் கூட்டுத்தாபனம் கொண்டு;ள்ள 100 ஏக்கர் காணியில் எரிபொருள் தாங்கி கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வளவிற்குள் நாளாந்தம் வரும் பெரும் எண்ணிக்ககையிலான தாங்கிகளைக்கொண்ட வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமாக 2 ஏக்கர் 3ரூட் 34.51 பேர்ச் காணியை வரையறுக்கப்பட்ட இலங்கை கனிய வள முனையங்கள் வுநசஅiயெடள நிறுவனத்திற்கு விற்பதனை மூலம் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

10. இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்காக அரசாங்க காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்

நாட்டில் மரமந்திரிகை உற்பத்திக்கான பாரிய கோரிக்கை நிலவுவதை கவனத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 479 ஏக்கரைக் கொண்ட புனரின் தோட்டம், மன்னார் மாவட்டத்தில் 6,498 ஏக்கரைக் கொண்ட கொன்டச்சி தோட்டம் மற்றும் 500 ஏக்கரைக் கொண்ட வெல்லங்குளம் தோட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,075 ஏக்கரைக் கொண்ட மாங்கேணி தோட்டம், திருகோணமலை மாவட்டத்தில் 681 ஏக்கரைக் கொண்ட திரியாய தோட்டம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 441 ஏக்கரைக் கொண்ட உழுவன்குளம், மாடின் இபில் இபில் விவசாய பண்ணை அமைந்துள்ள காணியான அரசாங்கத்தின் காணி மரமுந்திரிகையை உற்பத்தி செய்வதற்காக நீண்டகால குத்தகையின் அடிப்படையில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுப்பத்தாபனத்திடம் வழங்குவதற்காக பெருந்தோட்டத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கையில் தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்காக செயற்பாட்டு குழவொன்றை அமைத்தல்

தெங்கு தொழிற்துறையில் நிலவும் பிரச்சினை மற்றும் முகாமைத்துவத்தை உரிய முறையில் புரிந்து கொள்வதன் மூலம் வெற்றிகரமாக தெங்கு உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளரின் தலைமையிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளின் அங்கத்துவத்துடன் நடவடிக்கை குழுவொன்றை அமைப்பதற்காக பெருந்தோட்ட தொழிற்றுறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கல்தொட்ட பொலிஸ் நிலையத்திலுள்ள காணி மற்றும் கட்டிடத்தை இலங்கை பொலிஸிடம் கையளித்தல்

30 வருட காலத்திற்கு மேலாக இலங்கை பொலிஸினால் அனுபவிக்கப்பட்டுவரும் பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவில் கல்தொட்ட கிராம உத்தியோகத்தர் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்தின் காணி மற்றும் இந்த காணியில் அமைந்துள்ள கட்டிடத்தை இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் வழங்குவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. நெல் தவிர்ந்த ஏனைய பயிர் உற்பத்திக்கான உர நிவாரணம் வேலைத்திட்டத்தின் கீழ் யுரியா (மேலதிக உர எடையை) இறக்குமதி செய்தல்.

அரசாங்கத்தின் உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டுக்கான யுரியா உர தேவை நெல், உற்பத்திக்காக 238,200 மெற்றிக் தொன்ஆகவும் ஏனைய பயிர் உற்பத்திக்காக 170000மெற்றிக் தொன் ஆகவும் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும் 2018ஆம் ஆண்டு பெரும்போக உற்பத்தி அளவிற்கு அமைவாக 2019 பெரும்போக உற்பத்தி அளவு அதிகரித்தமை பெரும்பாலும் அதிகரிக்கக் கூடிய நிலைமை நிலவுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் யுரியா உரத்திற்கான தட்டுப்பாட்டை தடுப்பதற்காக எதிர்வரும் சில மாதங்களுக்காக ஏனைய பயிர் உற்பத்தி தேவைக்காக மேலதிகமாக 15,000 மெற்றிக் தொன் யுரியாவை இறக்குமதி செய்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையொன்றை தயாரித்து அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையினால் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வன்முறைகள் அற்ற சூழல் ஒன்றை உருவாக்குவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தயாரிக்கப்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் வறட்சி வலய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. பரிந்துரைக்கப்படும் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்

பரிந்துரைக்கப்படும் கட்டளைச் சட்ட திருத்த்ததை மேற்கொள்வதற்காக திருத்த சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைவு பிரிவிற்கு தேவையான ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக சட்ட திருத்த வரைவினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அந்த திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. தேசிய மிருகக்காட்சி திணைக்களத்தின் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆலோசனை சேவையை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை

தேசிய மிருகக்காட்சி திணைக்களத்திற்கு உட்பட்ட தெஹிவளை மிருகக்காட்சிசாலை , பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல வனவிலங்கு பூங்கா, ரிதிகம சபாரி பூங்கா மற்றும் கோணபொல விவசாய பண்ணை உள்ளிட்ட நிறுவனங்களில் அடிப்படைகளை தயாரிப்பதற்காக மத்திய பொறியியலாளர் ஆலோசனை அலுவலகம் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம் கட்டிடத் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை சேவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனைத்து நிர்மாணப் பணிகளையும் 2022ஆம் ஆண்டு இறுதியில் பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருப்பதால் சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகளின் தன்மை , காணப்படும் சிக்கல்கள் மற்றும் அதே போன்று விடயதானத்துடன் தொடர்பான சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொண்டுள்ள அனுபவம் அடிப்படையில் அதனை நிர்மாணப்பணிக்காக ஆலோசனை சேவையை இந்த நிறவனங்களிடமிருந்து பெற்றக் கொள்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கடன் நிதி வழங்கும் பேண்தகு நகர அபிவிருத்தி திட்டதின் 3ஆவது பொதி – குருநாகல், இரத்தினபுரி மற்றும் தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் சுற்றாடல் முகாமைத்துவ சேவைக்கான விரிவான அடிப்படையிலானத் திட்டம் மற்றும் பெறுகை பணிகளை மேற்கொள்வதற்காக ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பேண்தகு அபிவிஐத்தி நகர அபிவிருத்தி திட்டத்தின் 3ஆவது பொதியின் கீழ் குருநாகல், இரத்தினபுரி மற்றும் தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் சுற்றாடல் முகாமைத்துவ சேவைக்கான விரிவான அடிப்படையிலானத் திட்டம் மற்றும் பெறுகை பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைககுழுவின் சிபாரிசுக்கமைய WAPCOS Linrited, India sub Consultant with Summit Engineering Service aud Consultants (Pvt) Ltd. Sri Lanlia  மற்றும்; Projoct Management Associate Irrternalional (Pvt) Ltd., Sri Lanka என்ற நிறுவனங்களிடம் வழங்குவதற்காக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. சுற்றுலா அலுவல்களுக்காக வரி அடிப்படையிலான ரயில் அபிவிருத்தி மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான சேவை வழங்குநர்களின் பெறுகையை மேற்கொள்ளுதல்

சுற்றுலா அலுவல்களுக்காக குத்தகை அடிப்படையில் ரயில் அபிவிருத்தி மற்றும் நடைறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக, கண்டி வீதியில் சொகுசு பயணிகள் ரயில் பெட்டி சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், பதுளை, வடக்கு ,கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய லயில் பாதைகளில் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் பயணிகளின் தேவை மற்றும் தற்போதைய கோரிக்கையை கவனத்தில் கொண்டு தற்பொழுது சொகுசு சேவைகள் இடம்பெறாத ரயில் பாததைகளில் 5 வருட காலப்பகுதியில் சொகுசு பயணிகள் ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக போட்டி அடிப்படையில் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்காக கேள்வி மனுக்களை கோருவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. முதியோர்களின் புகையிலை பாவணை தொடர்பான சர்வதேச ஆய்வு – 2019/2020

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் நோய்க்கட்டுப்பாடு மத்திய நிலையத்தின் ஒத்துழைப்பை பெற்று உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்படும் மொத்த மதிப்பீட்;டு செலவான 217,000 கோடி அமெரிக்க டொலர்களில் முதியோர்களின் புகையிலை பாவனை தொடர்பான சர்வதேச ஆய்வை 2019ஃ2020 ஆண்டுகளில் மேற்கொள்வதற்காக குடிசன மறறும் தொகைமதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களத்திற்கு அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. 'சிலோன் டி' சர்வதேச ரீதியில் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ரஷ்யா மற்றும் யுக்ரேன் நாடுகளுக்கு பொதுமக்களின் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான நிறுவனமொன்றை தெரிவு செய்தல்

'சிலோன் டி' க்கான உலகளாவிய மேம்பாட்டு , வேலைத்திட்டத்தின் கீழ் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளில் ஒரு வருட வரையறை காலப்பகுதிக்கள் பொதுமக்கள் தொடர்பு குறித்த வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/s SPN coilrmunications என்ற நிறுவனத்தை தெரிவு செய்வதற்காக பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. மரணம் சான்றிதழ்களை பெற்றோர் உறுதிசெய்யப்பட்டவர்களின் ('காண முடியாமைக்கான சான்றிதழை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் காணாமல் போனதற்கான வழங்கப்படும் மரண சான்றிதழ்) இடைக்கால நிவாரணத்திற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளல்

காணமற் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு காணாமற் போன நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழை இரத்து செய்து 'காண முடியாதவராக சான்றிதழ்' வழங்குவதற்கும் அந்த நபர்களின் குடும்பங்களுக்க மாதாந்தம் தலா 6000ரூபா வீதம் இடைக்கால நிவாரண கொடுப்பனவை வழங்குதற்கும் அமைச்சரவையினால் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாறான மரண சான்றிதழை இரத்து செய்து வழங்கப்படும் 'காண முடியாமைக்கான சான்றிதழு'க்கான செல்லுபடியான கால எல்லை 2 வருடம் மாத்திரம் என்பதினால் சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ள காணாமற் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நிர்வாக, நாளாந்த மற்றும் சமூக பொருளாதார சவால்கள் பலவற்றை எதிர்ககொள்ள வேணடியுள்ளது. இதனால் 1995ஆம் ஆண்டு இல 2 இன் கீழான இறப்பு பதிவை மேற்கொள்ளும் (தற்கால ஒழுங்குவிதிகள் ) சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மரண சான்றிதழ் மரணத்திற்கு காரணம் காணமற் போனமை அல்லது அடையாளங் காணப்படாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளமை உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளதினால் இறப்புக்குள்ளானதாக கருதப்படுவார் என்ற கருத்தை முன்வைக்கும் தரப்பினர் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் அல்லது 2010 ஆம் ஆண்டு இல 19 கீழான இறப்பு பதிவை மேற்கொள்ளல் (தற்கால ஒழுங்கு விதிகள்) சட்டத்தின் 2ஆவது சரத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மரண சான்றிதழ் வழங்கப்பட்டிருக்குமாயின் காண முடியாமைக்கான சான்றிதழ் அமைவாக வழங்கப்படும் ரூபா 6000 மாததாந்த இடைக்கால நிவாரண கொடுப்பனவு அந்த நபரின் குடும்பத்தாரிடம் வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அரச மொழி சமூக நல்லிணக்கம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அஙக்குPhரம் வழங்கியுள்ளது.

22. மறைவான குற்றவாளிகளின் சொத்துக்கள் சட்டம்

சமீப காலத்தில் ஏற்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல் சர்வதேச ரீதியில் வியாபித்த குற்றம் மற்றும் பாரிய பொருளாதார மற்றும் நிதி குற்றங்கள் பாரிய அளவில் அதிகரித்தள்ளமை காரணமாக இவ்வாறான குற்றங்களை கட்டுப்படுத்தல் அல்லது ஆரம்பத்திலேயே இல்லாமல் செய்தல் மற்றும் குற்றச் செயலின் மூலமான சொத்துக்களை கைப்பற்றுதல் தொடர்பில் கவனம் செலுத்துதல் மிகவும் முக்கியமானதாகும் இதனால் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணியினால் குற்றச்செயலின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக உத்தேச சட்டம் தொடர்பில் கொள்கை மற்றும் அரசியல் யாப்பு பணி கட்டமைப்பொன்று அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் இந்த பணி கட்டமைப்பின் மூலம் உத்தேச சட்டத்திற்காக கொள்கை பிரகடனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கவைமாக குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்கள் தொடர்பில் உத்தேச சட்டத்தின் கொள்கை மற்றும் அரசியல் யாப்பு பணி கட்டமைப்பில் உள்ளடங்கியுள்ள எண்ணக்கரு மற்றும் உள்ளடக்க விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான யாப்பு திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளுமாறு சட்டதிருத்த மூல வரைவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. 2020.01.01.தொடக்கம் 2020.08.31 வரையில் மர்கன் Marban oil எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுதல்

2020.01.01.தொடக்கம் 2020.08.31 வரையிலான எட்டுமாதத்திற்கு (08) மர்பன் மசகு எண்ணெய் 8,400000 பீப்பாய்களை கொள்வனவு செய்யும் நீண்டகால ஒப்பந்த்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/S B,B- Energv (Asia) Pte. Ltd' என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. 2019.01.01 தொடக்கம் 2020.06.30 வரையில் டீசல் (ஆகக்கூடிய சல்பர் 0.05 வீதம்) 1,96,0000 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுதல்

2019.01.01 தொடக்கம் 2020.06.30 வரையிலான ஒன்பது மாதத்திற்கு (9) (ஆகக்கூடிய சல்பர் 0.05 வீதம்) 1,96,0000 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தம் பெறுகை மேன்முறையீடு சபையின் சிபாரிசுக்கமைய M/S  Emirates National Oil Company Pte. Ltd., Singapore என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றம் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்தல்

பெருந்தோட்டத்துறை தொழிற்தறை அமைச்சின் ஊடாக இலங்கை தேயிலை சபைக்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் பெருந்தோட்டத்துறையின் வருமானத்தை துரிதமாக அதிகரிப்பதற்காக இந்த நிதியைப் பயன்படுத்தி பொருத்தமான பொறிமுறையொன்றை வகுப்பது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இலங்கை தேயிலை சபைக்கு அதிகாரத்தை வழங்புவதற்கும், அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த மானியத்தை பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் சமூக சேமநலம் மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதன் மூலம் அவர்கள் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஊடாக வருமானத்தை ஊக்குவிப்பதற்கான திட்மெடான்றை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் அவர்களும பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. வரையறுக்கப்பட்ட லங்கா சதோசவிற்காக உள்ளுர் சந்தையின் மூலம் வெள்ளை நாடு மற்றும் சம்பா அரிசியை கொள்வனவு செய்தல்

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக பகிரங்க சந்தைக்குள் போதுமான அளவு அரிசியை வைத்திருக்கும் தேவையை கவனத்தில் கொண்டு நெல் சந்தைப்படுத்தும் சபையில் உள்ள நெலில் ஆகக் குறைந்த வகையில் 20,000 மெற்றிக் தொன் (10,000 மெற்றிக் தொன் மற்றும் 10,000 மெற்றிக் தொன் சம்பா) வரையறுக்கப்பட்ட இலங்கை சதோச நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர் அல்லது (MARKFED) நிறுவனம் மூலம் அரிசியாக மாற்றியமைத்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் சந்தைக்கு விநியோகிப்பதற்காக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் மற்றும் நீண்டகால இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமரத்துதல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08