உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு  மீண்டும் விளக்கமறியல்

Published By: Digital Desk 4

30 Oct, 2019 | 08:51 PM
image

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  அண்மையில்  கைதான 13  பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு  சந்தர்ப்பங்களில் இன்று புதன்கிழமை(30)   எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது  சந்தேக நபர்கள்  7  பேராகவும் 6 பேராகவும் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள்  அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும்  பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின்  பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி  பல  மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்தனர்.

அதனடிப்படையில்  தொடர்ச்சியாக  கடந்த காலங்களில்   விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு சந்தேக நபர்  புதிதாக  பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி  சட்டத்தரணி ஊடாக  விடுத்த வேண்டுகோளை  செவிமடுத்த  நீதிவான்   குழந்தையை சிறைக்கு சென்று காண்பிக்கமுடியும் எனவும்  இதன்போது சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை  தொற்று நோய் பரவும் அபாயம் குறித்து பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும் என  விண்ணப்ப  மனுவை நிராகரித்தார்.

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன்  அனைத்து சந்தேக நபர்களதும்    விளக்கமறியல் மீண்டும்   நீடிக்கப்பட்டு  இவ்வழக்கு விசாரணை   அடுத்த வழக்கு தவணையை  எதிர்வரும்  நவம்பர் 13 ஆம்  திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி  கல்முனை சாய்ந்தமருது  சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில் கல்முனை சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிற்கு உதவி ஒத்தாசை வழங்கிய  சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53