6 இலட்சம் அரச ஊழியர்கள் நாளையும் நாளைமறுதினமும் தபால்  மூலம் வாக்களிப்பு 

Published By: Vishnu

30 Oct, 2019 | 07:09 PM
image

(ஆர்.விதுஷா)

ஜனாதிபதி  தேர்தலுக்கான  தபால்  மூலவாக்கெடுப்பு   நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளில்  சுதந்திரமானதும்  நியாயமானதுமான  தேர்தல்களுக்கான  மக்கள்  செயற்பாட்டு  அமைப்பின்  (பெப்ரல் )  ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.  

நாளையும் நாளைமறுதினமும் தபால்  மூல வாக்கெடுப்பு  இடம்  பெறவுள்ள   நிலையில்  சுமார்  6  இலட்சம்  அரச ஊழியர்கள் அதற்கு   தகுதி  பெற்றுள்ளனர். 

தபால் மூலவாக்கெடுப்புக்கான  அனைத்து ஏற்பாடுகளும்   பூர்த்தி  செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, அனைத்து பொலிஸ்  நிலைய  மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளும்  தபால் மூல வாக்கெடுப்பு  இடம்பெறும்  நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும்,  கண்காணிப்பு  நடவடிக்கைகளிலும்  ஈடுபடவுள்ளனர்.  

அத்துடன், தபால்மூல வாக்கெடுப்பு  நடவடிக்கைகள் 4 மற்றும் 5  ஆம்  திகதிகளிலும்  இடம் பெறவுள்ளது.

அதேவேளை முக்கிய  காரணங்களினால் வாக்களிக்க  முடியாமல்போன  வாக்காளர்களுக்கு  தபால் மூலம் வாக்களிப்பதற்காக  7ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை  வசதிகள் செய்து  கொடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01