ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

Published By: Raam

25 May, 2016 | 09:28 AM
image

ஆஸ்­தி­ரிய ஜனா­தி­பதி தேர்­தலில் சுயேச்சை வேட்­பா­ள­ரான அலெக்­ஸாண்டர் வான் டெர் பெலென் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வென்­றுள்ளார்.

இந்தத் தேர்­தலில் அவர் 50.3 சத­வீத வாக்­கு­களைப் பெற்று, 49.7 சத­வீத வாக்­கு­களைப் பெற்ற வலது சாரி விடு­தலைக் கட்­சியின் வேட்­பாளர் நோர்பேர்ட் ஹொபெரை தோற்­க­டித்­துள்ளார். அளிக்­கப்­பட்ட 4.64 மில்­லியன் வாக்­கு­களில் 31,000 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் நோர்பேர்ட் ஹொபெரை விடவும் அவர் முன்­னி­லையில் உள்ளார்.

நோர்பேர்ட் ஹொபெர் மேற்­படி தேர்­த­லி­லான தோல்­வியை ஒப்புக் கொண்­டுள்ளார். அவர் வெற்றி பெற்­றி­ருப்பின் ஆஸ்­தி­ரி­யாவின் முத­லா­வது வலது சாரி தலை­வ­ராக இருப்பார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அலெக்­ஸாண்­டரின் வெற்­றி­யா­னது ஐரோப்­பிய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ஆறுதல் அளிப்­ப­தாக உள்­ள­தாக ஜேர்மன் வெளி­நாட்டு அமைச்சர் மானுவேல் வல்லெஸ் தெரி­வித்தார்.

குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எதி­ரான கொள்­கையைக் கொண்ட ஹொபெர் வெற்றி பெற்­றி­ருந்தால், அது பல ஐரோப்­பிய நாடு­களில் தேசி­ய­வாத மற்றும் குடி­யேற்­றத்­துக்கு எதி­ரான கட்­சி­களின் எழுச்­சிக்கு வித்­தி­டு­வ­தாக அமையும் என அஞ்­சப்­பட்­டது.

தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய ஐரோப்­பிய ஒன்­றிய ஆத­ரவு வேட்­பா­ள­ரான அலெக்­ஸாண்டர் (72 வயது), மக்­களின் பயம் மற்றும் சினத்தை செவி­ம­டுக்கப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார்.

அதற்கு வேறு­பட்ட பேச்­சு­வார்த்தைக் கலா­சா­ரமும் அர­சியல் முறை­மையும் தேவை­யா­க­வுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், நோர்பேர்ட் ஹொபெரின் வாக்­கா­ளர்­க­ளது நம்­பிக்­கை­யையும் வென்று அனைத்து ஆஸ்­தி­ரிய மக்­க­ளுக்­கு­மான கட்சி சார்­பற்ற ஜனா­தி­ப­தி­யாக சேவை­யாற்ற விரும்­பு­வ­தாக கூறினார்.

குடி­யேற்­ற­வா­சி­க­ளான ரஷ்ய தந்­தைக்கும் எஸ்­தோ­னிய தாயா­ருக்கும் வியன்­னாவில் பிறந்­த­வ­ரான அலெக்­ஸாண்டர் வான் டெர் பெலென், தன்னை ஒரு சிறுவர் அகதியாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08