தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்தேறும் அவலங்கள்: கழிவு‌நீர் தொட்டி, நீர் தொட்டியில் விழுந்து இரு குழந்தைகள் பலி

Published By: J.G.Stephan

30 Oct, 2019 | 04:36 PM
image

இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி ,நேத்ரா தேவி ஆகியோருக்கு 3 வயதில் ருத்ரன் என்ற மகனொருவன்  உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாத்தா மணிகண்டன் வீட்டுக்கு ருத்ரன் சென்றிறுந்தவேளை, மணிகண்டன் தனது வீட்டு முன் மழை நீர் சேகரிப்புக்காக 6 அடி தொட்டியை அமைத்திருந்துள்ளார். இந்நிலையில், குறித்த இத்தொட்டி மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது. 

இந்நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்ததுள்ளதால் மழைநீர் தொட்டி முழுவதுமாக தண்ணீரால் நிரம்பியிருந்தது.



இன்று காலை மழை சற்று ஓய்ந்த நேரத்தில் சிறுவன் ருத்ரன் வீட்டின் வெளியே விளையாடியதாக தெரிகிறது. அப்போது தண்ணீர் நிரம்பியிருந்த மழைநீர் தொட்டிக்குள் ருத்ரன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளான். இதை பார்த்த அப்பகுதியினர் உடனே தண்ணீரில் மூழ்கிய ருத்ரனை மீட்டுள்ளதோடு, குறித்த இச்சிறுவன் கன்னிச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். அங்கு அவனை பரிசோதித்த வைத்தியர்கள் ருத்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வச்சகாரபட்டி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதோடு, மழைநீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேவேளை 

கடலூர் மாவட்டத்தில் கழிவு‌நீர் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 3 வயது பவழவேணி எனும் குழந்தையை, குழந்தையின் தாத்தாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர். அப்போது குழந்தை பவழவேணி வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்துள்ளது. 

இதனை யாரும் கவனிக்காத நிலையில், மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் குழந்தை நீண்ட நேரம் இருந்துள்ளது. தாய் பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியபோது குழந்தை குழியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை கண்ட தாயார் கதறியழுதுள்ளார.

திருச்சி நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் சுஜித் தவறி விழுந்து இறந்த துயரம் மறையும் முன் விருதுநகரில் ருத்ரன், கடலூர் பவழவேணி ஆகிய குழந்தைகளின் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52