எனது தந்தை கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் கோத்தாபயவே ; பார்த்திபன் 

Published By: Digital Desk 4

30 Oct, 2019 | 03:32 PM
image

தி.சோபிதன்

யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியராக இருந்த எனது தந்தையான வரதராஜன் கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவே என பலமான சந்தேகம் இருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருப்பினருமான வ.பார்த்திபன் தெரிவித்தார்.

Image result for தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான வ.பார்த்திபன்

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்ப்பாளர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும்போது தான் எதிர்காலத்தின் ஜனாதிபதி என்றும் நீங்கள் கடந்த காலங்களில் நடந்தவற்றை பற்றி குழம்பிக் கொண்டிருக்கின்ரீர்கள் என்று கூறியிருந்தார். ஆனால் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு  உண்மையில் எதிர்காலம் என்பது காணாமல் போன பிள்ளைகளும் உறவுகளுமே .அதனை தங்களின் எதிர்காலமாக நினைத்தே போராடி வருகின்றனர்.அவ்வாறான நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலரின் கருத்துக்கள் கண்டனத்துக்கு உரியது.

உண்மையிலேயே காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனை எவ்வாறு இருக்கும் என்று அனுபவித்தவன்  தற்போதும் அனுபவித்து வருகின்றேன் என்ற ரீதியில் சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.கடந்த 2008/05/10 அன்று எனது தந்தை கொழும்பு வெள்ளைவத்தை தமிழ்ச் சங்கத்துக்கு அண்மையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தார்.அவர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் எனது அம்மாவும்,மாமாவும் வெள்ளைவத்தை 42 ஆவது ஒழுங்கையில் வைத்து மர்ம நபர்களினால் கடத்தப்பட்ட்னர்.ஒரே நாளில் அடுத்தப்படுத்து எனது குடும்பத்தார் கடத்தப்பட்ட்னர்.பின்னர் கடத்தல்காரர்கள் என்னுடைய அம்மாவினை மட்டும் பொரளையில் இறக்கிவிட்டு சென்றனர்.

ஆனால் என்னுடைய அப்பாவும்,மாமாவும் விடுவிக்கப்படாமல் காணாமல் போயிருந்தனர்.பின்னர் நாம் பொலிஸ் நிலையம்,தொண்டு நிறுத்திவனங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தோம்.எனது தந்தை கடத்தப்பட்டு 33 நாட்களின் பின்னர் கொழும்பு தெஹிவளை பகுதியில் கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேன் ஒன்றில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனர்.

கடத்தல் காரர்களிடம் இருந்து எனது மாமா இன்றுவரை வரவில்லை.33 நாட்களின் பின்னர் வந்த எனது தந்தை என்னிடம் கூறியிருந்தார்.தன்னை கடத்தியவர்கள் கோத்தாபயவின் ஆட்கள் என கூறியதாகவும்,அரசியலில் ஈடுபடக் கூடாது கற்பித்தலை மட்டும் செய்ய வேண்டும் என்று.மேலும் தந்தையின் வாக்குமூலத்தின் படி இந்த கடத்தலிற்கு பின்னால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவே இருப்பார் என பலமான சந்தேகம் உள்ளது.

இதுமட்டுமல்லாது ராஜபக்சக்களின் ஆடசிக் காலத்திலேயே இது நடந்துள்ளமையினால் அவர்களே பொறுப்புக் கூறவேண்டும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08