நாங்கள் இந்த தொடரிலேயே இணைந்து பணியாற்றுவோமா அல்லது ஐபிஎல் வரை காத்திருப்போமா? ஆட்டநிர்ணய சதி சந்தேகநபர் சஹீப் அல் ஹசனுடன் மேற்கொண்ட அதிர்ச்சி உரையாடல்

Published By: Rajeeban

30 Oct, 2019 | 11:27 AM
image

ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடும்  தீபக் அகர்வால்  என்பவருடன் தனக்கு தொடர்புள்ளதை ஐசிசியின் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்த தவறியமைக்காக பங்களாதேஸ் ரி20 மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் சஹீப் அல் ஹசனிற்கு எதிராக ஐசிசி தடையை அறிவித்துள்ளது.

தீபக் அகர்வாலிற்கும் சஹீப் அல் ஹசனிற்கும் இடையிலான வட்ஸ் உரையாடல்களை வெளியிட்டுள்ள ஐசிசி  உள்ளகதகவல்களை தீபக் அகர்வால் பெற்றுக்கொள்ள முயன்றார் என தெரிவித்துள்ளது.

அகர்வால் சஹீப்பினை  2017 ம் ஆண்டு பங்களாதேஸ் பிரீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றவேளை தொடர்புகொண்டார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

சஹீப் அவ்வேளை பங்களாதேஸ் டைனமைட் அணிக்காக விளையாடினார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

சஹீப் அல் ஹசனின் நண்பர் ஒருவர் மூலமாகவோ அகர்வால் சஹீப்பினை தொடர்புகொண்டுள்ளார்.

பங்களாதேஸ் பிhமீயர் லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்களுடன் தனக்கு தொடர்பினை ஏற்படுத்தி தருமாறு அகர்வால் அந்த நபரை கேட்டுள்ளார் என ஐசிசி  தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அகர்வால் சஹீப்பினை சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதை வட்ஸ்அப் தகவல் பரிமாற்றங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜனவரி 2018

ஜனவரி மாதம் பங்களாதேசில் இலங்கை சிம்பாப்வே அணிகள் விளையாடிய ஒருநாள் முத்தொடர் இடம்பெற்றது.

ஜனவரி 19 ம் திகதி இலங்கை பங்களாதேஸ் அணிகளிற்கு இடையில் இடம்பெற்ற போட்டியில்  பங்களாதேஸ் அணி வெற்றி பெற்றது. சஹீப் அல் ஹசன் ஆட்டநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

சஹீப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்த அகர்வால் அதற்கு பின்னர்  அனுப்பிய மர்மமான செய்தி ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினரை எச்சரிக்கை அடையச்செய்துள்ளது.

இந்த தொடரில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோமா அல்லது ஐபிஎல்வரை காத்திருப்போமா என அவர் சஹீப்பினை கேட்டுள்ளார் என ஐசிசி தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சஹீப் அல் ஹசன் உள்தகவலை வழங்குவது குறித்தே  அகர்வால் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ள ஐசிசி உள்தகவலை பெறுவதையே இணைந்து பணியாற்றுவது என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

சஹீப் அகர்வால் தன்னை அணுகியது குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினரிடமும் ஏனையவர்களிடம் எதனையும் தெரிவிக்கவில்லை.

இதற்கு நான்கு நாட்களிற்கு பின்னர் அகர்வால் மிக தெளிவான செய்தியை அனுப்பியுள்ளார். புரோ நாங்கள் இந்த தொடரில் இணைந்து பணியாற்றுகின்றோமா இல்லையா  என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் , இதனையும் சஹீப் அல் ஹசன் ஐசிசியின் அதிகாரிகளிற்கு அறிவிக்கவில்லை.

ஏப்பிரல் 2018

2018 ஐபிஎல் தொடரில் சஹீப் அல் ஹசன் சன்ரைசர்ஸ் ஹதாராபாத் அணிக்காக விளையாடினார்.

ஏப்பிரல் 26 ம் திகதி பஞ்சாபிற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அகர்வால் வட்ஸ்அப் செய்தியொன்றை சஹீப்பிற்கு அனுப்பியுள்ளார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலின் போதே அகர்வாலை சந்திப்பதற்கு சஹீப் இணங்கியுள்ளார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

அன்றையை தினம் இடம்பெறவுள்ள போட்டியில் குறிப்பிட்ட வீரர்  விளையாடுவாரா என கேட்டு அகர்வால் சஹீப்பிற்கு செய்தியொன்றை அனுப்பினார், என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் 26 ம் திகதி இருவரும்  பிட்கொய்ன்ஸ் டொலர் கணக்குகள் குறித்து உரையாடியுள்ளனர்,அகர்வால் சஹீப்பிடம் டொலர் வங்கி கணக்கு குறித்து கேட்டுள்ளதுடன் முதலில் அவரை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் 26 ம் திகதி இடம்பெற்ற வட்ஸ்அப் உரையாடல்கள் பலவற்றை தான் அழித்துவிட்டதாக சஹீப் அல் ஹசன் தெரிவித்துள்ளார் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

அகர்வாலுடன் இரகசிய உரையாடல்களை மேற்கொண்டதையும் பின்னர் அவரை சந்தித்ததையும் பங்களாதேஸ் வீரர் ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த வருடம் இரண்டு தடவை சஹீப்பினை ஐசிசி அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.

இதன் போது  தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35