நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்துவது எப்படி? 

Published By: Digital Desk 4

30 Oct, 2019 | 11:21 AM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது உணவு சார்ந்த பழக்கவழக்கத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவது, பசிக்கும் போது சாப்பிடாமல், விரும்பும்போது சாப்பிடுவது, உடைகளை இறுக்கமாக அணிவது, சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வது அல்லது உறங்குவது போன்ற காரணங்களால் எம்மில் முப்பது சதவீத மக்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

இவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டவுடன் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளின் செயல்பாடுகளும் இணைந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அளவுடன் சாப்பிடுவது, நேரத்திற்கு சாப்பிடுவது. என உணவு பழக்கத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டால். நெஞ்செரிச்சல் பாதிப்பிலிருந்து  விடுபடலாம். அத்துடன் மீண்டும் வராமல் தடுக்கலாம்.

வயிற்றில் சுரக்கும் அமிலமானது, உணவுக்குழாயில் மீண்டும் மேல்நோக்கி வருவதால் ஏற்படக்கூடியது தான் நெஞ்செரிச்சல். இது சில ஆரோக்கிய சீர்கேட்டிற்கு அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதனை உடனடியாக குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் நோயாக மாறிவிடக்கூடிய அபாயம் உண்டு. உடற்பருமன், புகைப்பிடித்தல், மது அருந்துதல், மருத்துவரின் பரிந்துரையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளுதல் என பல காரணங்களாலும் நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும்.

அஜீரணக் கோளாறுகளுக்கு நெஞ்செரிச்சல் மிக முக்கியமான அறிகுறி. அத்துடன் உணவை விழுங்குவதற்கு சிரமம் ஏற்படுவது. குரல் வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நடிப்பது, அதிகளவில் தண்ணீர் தாகம் எடுப்பது, இரவு நேரத்தில் உறக்கத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்படுவது.

என பல அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 

நெஞ்செரிச்சல் வராமல் தடுப்பதற்கு இரவு நேரத்தில் உணவு உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவேண்டும். அதே தருணத்தில் இரவு பதினோரு மணிக்குள் உறங்கச் சென்று விடவேண்டும்.

டொக்டர் முரளி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04