முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒரு பேரவலம் ; உணவின்றி பசியுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்

Published By: Digital Desk 4

29 Oct, 2019 | 05:58 PM
image

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு தினமும் உணவு இன்றி 24 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். மேற்பிரிவு மாணவர்களான தாய் தந்தையை இழந்து உறவினர்களுடன் வசித்து வரும் இவ்வாறான மாணவர்களே தினமும் பாடசாலைக்கு உணவு இன்றி பசியுடன் செல்கின்றனர். 

இதனால் அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் இச் செயற்பாட்டினால் மாணவர்கள் சிலர் பல்வேறு சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுக்க தூண்டுவதாகவும் மாணவச்சமூகம் ஒரு சீர்கேடான நிலைக்குத்தள்ளப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.விக்கினேஸ்வரன் தமது பாடசாலையின் மாணவர்களின் தேவை கருதியும் தற்போது பருகிவரும் குடிநீரில் இரும்பு பொருட்கள், அமிலங்கள் கலந்து கொண்டுள்ள காரணத்தினால் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க முடியாமலிருப்பதாகவும் குடிநீரை வடிகட்டி மாணவர்களுக்கு வழங்க குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பாடசாலைக்கு வழங்குமாறு விடுத்த கோரிக்கையினப்படையில் அங்கு சென்ற வன்னி மக்களின் காப்பகத்தின் தமிழ் சிங்கள சகோதரர்களிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு பௌதீகவள குறைபாடுகளுடன் இயங்கிவரும் குறித்த பாடசாலைக்கு அவசியத் தேவையான குடி தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தினை முதலில் பெற்றுத்தருவதாக அங்கு சென்ற பிரதிநிதிகளால்  அதிபருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஆனந்தபுரம் பாடசாலையின் அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினடிப்படையில் அங்கு சென்று மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் அப்பாடசாலையில்  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் ஒன்பது மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். 

அவர்களுக்கு மதிப்பளிப்பதற்கும் மாணவர்களை கௌரவிப்பதற்கும் உதவி வழங்குமாறு பாடசாலையின் அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொண்டு அதற்கான நிதி உதவிகளை வழங்குவதாகவும் பாடசாலை சென்ற பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04