ஐ.தே.க.வுக்கு ஆதரவாக செயற்படும் சந்திரிகா

Published By: Vishnu

29 Oct, 2019 | 02:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளுக்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தற்போது அரசியல் ரீதியில் செயற்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர்  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி, பொதுஜன  பெரமுன இணைந்த  ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இராஜகிரியவில் உள்ள  எதிரணியின் காரியாலயத்தில்  இடம் பெற்றது. அதில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்   அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது  தனித்து எடுத்த தீர்மானம் அல்ல,  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய கட்சியின்  செயற்குழுவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.  இதனால் சுதந்திர கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

சுதந்திர கட்சியை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக  அரசியல் ரீதியில்  செயற்படுகின்றார். ஒரு  சிலரும் ஐக்கிய தேசிய கட்சியின் வரப்பிரசாதங்களுக்கு அடிபணிந்துள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான   கூட்டணியை  ஒருபோதும் பிளவுப்படுத்த முடியாது.

இடம் பெறவுள்ள ஜனாதிபதி   தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  எத்தரப்பிருக்கும்  பாதிப்பு ஏற்பாத வகையில் நாட்டு தலைவர் என்ற ரீதியில் செயற்படுவார் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11