ஆட்ட நிர்ணய சதி குறித்து தகவல் வழங்க தவறினார் சஹீப் அல் ஹசன்- தடையை எதிர்கொள்கின்றார்

Published By: Rajeeban

29 Oct, 2019 | 01:15 PM
image

பங்களாதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர் சகீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் குறித்து அறிவிக்காதமைக்காக அவரிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அணிக்கான பயிற்சியில் சகீப் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசியின் உத்தரவின் பேரிலேயே  சஹீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு பங்களாதேஸ் கிரிக்கெட் நிர்வாகம் தடை விதித்துள்ளது என  பங்களாதேசின் நாளேடு  தெரிவித்துள்ளது.

இதன்காரணமாகவே அவர் பயிற்சிகளில் ஈடுபடவில்லை அணியின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என  அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் சர்வதேச போட்டியொன்றின் போது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட ஒருவர் சஹீப்பிற்கு பணம் வழங்க முன்வந்தார் இதனை சஹீப்  நிர்வாகத்தினரிற்கு தெரியப்படுத்தவில்லை என  அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

இதனை அவர் சமீபத்தில் ஐசிசியின் ஊழல் விசாரணை பிரிவினரிற்கு வழங்கிய வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35