ரணிலுக்கு போட்டி மைத்திரிபாலவே

Published By: Raam

25 May, 2016 | 08:06 AM
image

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைக்கு இணங்கி ஆட்சி செய்­வ­தற்­காக தேசிய அர­சாங்கத்தில் இணை­ய­வில்லை. மாறாக இரு­கட்சி ஒரு­மைப்­பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தற்­கா­கவே இணக்­க­ப்பாட்டு அர­சியலி­ல் ஈடு­பாடு காட்­டு­கின்றோம் என சுதந்­திரக் கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சிகள் அனைத்­துக்கும் இன­வாத கொள்­கை­களை கடைப்­பி­டிக்க அதி­காரம் உள்­ளது. ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யினுல் உள்ள எவரும் இன­வாத போக்கில் பய­ணிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

முன்னால் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவும் ,மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது அவர்கள் போட்­டி­யிட்­டாலும் சட்ட மீற­லாகும். எனவே அடுத்த தேர்­த­லிலும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்கும் நோக்­கி­லேயே சுதந்­திர கட்சி பய­ணிக்­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­யலார் சந்­திப்பில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் ஒரு பிரச்­சிணை தேசிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுக்கும் போது அதற்கு அதிக தட­வைகள் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியே தீர்வு கண்­டுள்­ளது. தற்­போது எமது நாட்டில் நல்­லி­ணக்கம் இல்­லா­மையே தேசிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. அதற்கு தீர்வு காண்­ப­தற்கு சுதந்­திர கட்சி என்ற வகையில் பல்­வேறு முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

அதற்­க­மைய உலக நாடுகள் மத்­தி­யிலும் சக­லரும் ஏற்­றுக்­கொள்ள கூடிய வகையில் அர­சி­ய­ல­மைப்பை பின்­பற்றி நடக்கும் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளார். அதனால் அவ­ருக்கு ஜீ.7 மாநாட்டில் பங்­கேற்கும் படி அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் இந்­தி­ய­விற்­கான விஜயம் மேற்­கொண்­டி­ருந்த போது இரா­ஜ­தந்­திர முறையில் இந்­தி­யா­வு­ட­னான சில சிக்­கல்­களை களைந்தார் இந்­நி­லையில் சர்­வ­தேச தர­வ­ரி­சையில் இடம்­பெறும் நாடுகள் பல­வற்­று­டனும் எமக்கு உள்ள சிக்­கல்­களை இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகி தீர்வை பெற்­றுக்­கொள்வார் என்ற எதிர்­பார்ப்பு எமக்கு உள்­ளது.

இலங்­கையின் மீது தற்­போது பல்­வேறு நாடு­களும் முழு­மை­யான நம்­பிக்கை கொண்­டுள்­ளன. எனவே இவ்­வா­றான நாட்டின் ஒற்­று­மைக்கு பால­மா­க­வுள்ள தலை­வரின் கீழ் சுதந்­திர கட்­சியை சேர்ந்த அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். அதனால் எமது கட்சி எந்த ஒரு தனி நபரின் பின்­னாலும் செல்­லாது என்­பதில் மாற்­றுக்­கொள்கை இல்லை.

எமது கொள்­கை­களை மக்கள் ஆத­ரிக்­கின்­றனர். காலி கூட்­டத்தில் கலந்­துக்­கொண்ட மக்­களும் கிரு­லப்­பணை கூட்­டத்தில் கலந்­துக்­கொண்ட மக்­களும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளே­யாவர். அதே­நேரம் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைக்கு எதி­ரா­ன­வர்கள் எனவே இந்த இரு­த­ரப்பும் ஒன்­றி­ணையம் பட்­சத்தில் கெம்பல் மைதா­னத்தில் நிறைந்த கூட்­டத்தில் விடவும் பல மடங்கு அதி­க­ரித்­து­விடும். அதனால் தற்­போது எமது ஆத­ர­வா­ளர்கள் கற்­பித்­துள்ள பாடத்தின் பின்­ன­ரா­வது இணைந்து செயற்­பட வேண்டும்.

அவ்­வாறு ஒன்­றி­ணைந்து செல்லும் பட்­சத்தில் சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் எவரும் இன­வாத போக்கில் பய­ணிக்க முடி­யாது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பில் உள்ள பங்­காளி கட்­சிகள் எவரும் இன­வாதம் பேசலாம். அதற்கு எந்த வித தடையும் இல்லை அது அவர்­களின் தனிபட்ட் சுதந்­திரம்.

இந்­நி­லையில் தற்­போது நாம் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து இணக்­கப்­பாட்டு அர­சியல் செய்து வரு­கின்றோம். அதற்­காக ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் சுதந்­திர கட்­சி­யி­னதும் கொள்­கைகள் ஒன்­றென ஆகி­வி­டாது. எனவே தற்­போது எமது நாட்டில் நல்­லி­ணக்கம் இல்­லாமை தேசிய பிரச்­சி­னை­க­ளாக உரு­வெ­டுத்­துள்­ளது. அதற்கு நிரந்­தர தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்­ளவே ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணக்­கப்­பாட்டு அர­சியல் செய்­கின்றோம்.

ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி செய்தால் நாட்டில் குழப்ப நிலைகள் ஏற்­ப­டலாம் அந்த நிலை ஏற்­ப­டாமல் இருக்கும் வண்ணம் பாது­கா­கப்­ப­தற்கும் நாம் இவ்­வாறு இணக்­கப்­பாட்டு அர­சியல் செய்­கின்றோம். சக­ல­ருக்கு நீதி­யா­ன­தாக அமையும் தேர்தல் முறை­யொன்றை உரு­வாக்­கவும் இதனால் மாத்­தி­ரமே முடியும். சுதந்­திர கட்­சியின் மத்­திய குழு தீர்­மா­னிக்கும் வரையில் இணக்­கப்­பாட்டு அர­சியல் தொடரும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று அதி­கா­ரத்தை குறைத்­துக்­கொண்­டுள்ளார். எதிர்­கா­லத்தில் மேலும் சில அதி­கா­ரங்­களை குறைக்­க­வுள்ளோம். 19 ஆது திருத்­தத்தின் மூலம் இந்த அதி­கார குறைப்புச் செய்­யப்­பட்­டது. அத்­துடன் 5 வருட பத­வி­கா­லத்­துடன் இரு முறை ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கலாம் என்றும் சட்டம் திரு­ததம் செய்யப்ப்ட் நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­மா­ர­துங்க, மஹிந்த ராஜ­பக்ச ஆகி­யோ­ருக்கு மீண்டும் ஒரு­முறை ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­ததில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவை எதிர்த்து போட்­டி­யிடும் வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாத்­தி­ரமே உள்ளார். சுதந்­திர கட்­சியில் இரண்டாம் நிலை தலை­மைத்தும் ஒன்று உரு­வாக்­கப்­ப­டா­மை­யி­னா­லேயே இந்த நிலை தோன்­றி­யுள்­ளது.

கடந்த ஆட்­சியில் கட்­சியின் முதலாம்,இரண்டாம் , மூன்றாம் நிலை­களில் ராஜ­பக்­சக்­களே இருந்­தனர். அதனால் சரி­யான தலை­மைத்­துங்கள் உரு­வா­க­வில்லை. எனவே எதிர்­கா­லத்தில் 2 ஆம் நிலை தலை­மைத்­து­வங்­களை உரு­வாக்­கு­வ­திலும் அவ­தானம் செலுத்­த­வுள்ளோம்.

மஹிந்­தவின் உகண்டா விஜயம்

உகண்டா நாட்டில் 6 வரு­டங்­க­ளாக சர்­வா­தி­கார ஆட்சி இடம்­பெ­று­கின்­றது. அதேபோல் சூடான் நாடும் தற்­போது பிள­வ­டைந்­துள்­ளது. அந்த நாடு­களின் தலை­வர்­களை சர்­வ­தேச நாடுகள் புறக்­க­ணிக்­கின்­றனர். அந்த சந்­தர்ப்­பத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அந்­நாட்டு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தமை ஏற்­பு­டை­ய­தல்ல.

அவ­ருடன் இருக்­கின்ற ஆலோ­ச­கர்கள் அவரை கட்­டா­யத்தின் பேரில் அனுப்பி வைத்­துள்­ளனர். இந்­நி­லையில் இவர்­களும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை இல்­லாது செய்யும் ஐக்­கிய தேசிய கட்சியிள் திட்டத்திற்கு துணைபோயுள்ளனர். அதனால் அவர் உகண்டா செல்வதற்கான செலவை அரசாங்கம் வழங்கியது ஆனால் சென்ற பின்னர் இவ்வாறான மேசாமான அரசியல் சூழல் உள்ள நாட்டுக்கு மமஹிந்த சென்றுவிட்டார் என்று சாடுகின்றனர்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டு பிரச்சினையில் சிக்கிய விமல் வீரவன்சவுக்கும் குமார் குணரத்தினத்திற்கும் ஒரே குற்றச்சாட்டே உள்ளது. தற்போது குமார் குணரட்னம் சிறையில் இருக்கின்றார் ஆனால் விமல் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றார். அவர் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் சுதந்திர கட்சியை உடைக்கும் சூழ்ச்சியின் பங்குதாரர் ஆகியுள்ளார் அதனாலேயே அவருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59